மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால்-ன் "ஒடியன்" திரைப்படத்தின் புதிய டீஸர் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தினை குறித்து முதலில் அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது போது, மோகன்லாலின் ஓவியம் வடிவில் அது வெளியிடப்பட்டது. அந்த புகைப்படத்தில் அவர் இளம் வயது நாயகனாக தோன்றினார்.


இது ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியது. லால் அவ்வளவு எடையை உன்மையில் குறைத்தாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. 


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் மூலம் அதற்கான விடை வெளியாகியுள்ளது.


மலையாள சூப்பர் ஸ்டார் லால் இந்த டீசரில் மிகவும் மெலிந்து, இளமையான தோற்றத்தில் தோன்றியுள்ளார். இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கூறுகையில்... லால் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து 18-கிலோ வரை குறைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.



மேலும் இதற்காக அவர் பிரான்சை சேர்ந்த யோகா மற்றும் தோல் மருத்துவர்களின் உதவியை நாடி உடற்பயிற்சி மேற்கொண்டு தனது இலக்கை அடைந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.