மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் மோகன்லால் பதவியேற்க வாய்யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகர் இன்னசெனட் பதவி வகித்து வருகின்றார். தற்போது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து வரவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.


இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் லால் மனுதாக்கல் செய்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. எனவே மோகன் லால் விரைவில் மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவராக பதவியேற்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இத்தனையாண்டு காலம் தலைவர் பதவியில் இருந்த இன்னசென்ட், பதவியேற்ற நாள் முதல் நடிகர், நடிகையரின் பிரச்சணைகளை உடனடியாக தீர்த்து வைத்துள்ளார். சமீபத்தில் நடிகை பாவனா வழக்கில் திலீப் சிறை சென்ற விவகாரத்திலும் சிறப்பாக செயல்பட்டார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் தனது வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாகவும் விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என இன்னசென்ட் அறிவித்துள்ளார்.