விஜய் பட பினான்சியரிடம் சிக்கிய பணம்! வெளிவந்த புகைப்படங்கள்!!
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்ட ஆதார புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது.
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்ட ஆதார புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது.
சினிமா பைனான்சியர் அன்புசெழியன், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.
ஏஜிஎஸ் தயாரித்த கடைசி படமான "பிகில்" படத்தில் நடித்த நடிகர் விஜய்யிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் அடுத்த படமான "மாஸ்டர்" படப்பிடிப்பு நடந்து வரும் நெய்வேலியில் இருந்த நடிகரை விஜய்யை நேரில் சென்று அதிகாரிகள் விசாரித்தனர். இதனால் "மாஸ்டர்" படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ள, நடிகர் விஜய்யை சென்னை அழைத்து வரப்படுகிறார் எனவும் கூறப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவரின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று ஏஜிஎஸ் மற்றும் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் சுமார் ரூ 25 கோடி வரை சிக்கியதாக கூறப்பட்டது. தற்போது விஜய்யின் பினான்சியரிடம் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவர் தான் பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்பட்டது. அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பாதி படங்களுக்கு இவர் தான் பைனான்ஸியர் என்பது குறிப்பிடத்தக்கது.