தமிழ்நாட்டையும் தாண்டி... ஜெயிலர் பட ரிலீஸ் அன்று அடுத்தடுத்து லீவ் விடும் நிறுவனங்கள்
Rajinikanth Jailer Updates: ரஜினியின் ஜெயிலர் கொண்டாட்டம் உலகெங்கும் சூடுபிடித்துள்ள நிலையில், படம் வெளியாகும் ஆக.10ஆம் தேதி சென்னை மட்டுமின்றி பெங்களூரு போன்ற மற்ற மாநில நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
Rajinikanth Jailer Updates: ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆக.10 ஆம் தேதி பிரமாண்டமான அளவில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. மேலும் இந்த பான்-இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய அளவில் திறக்கப்பட உள்ளது. ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த படம் திரையில் வெளியாக உள்ளது.
அண்ணாத்த படம் பெரிய அளவில் கைக்கொடுக்காத நிலையில், ஜெயிலர் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் ஜெயிலர் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், பல நிறுவனங்கள் படத்தின் முதல் நாளான ஆக. 10ஆம் தேதி விடுமுறையை அறிவித்து வந்த நிலையில், மேலும் பெங்களூரு தனது கிளைகளில் உள்ள ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
அலுவலக நிர்வாகம், ஊழியர்கள் படத்தை திருட்டுத்தனமாக பார்ப்பதை தடுப்பதற்காக அவர்களுக்கு இலவச டிக்கெட்டுகளையும் வழங்கியுள்ளது. ரஜினிகாந்த் பட ரிலீஸுக்கு விடுமுறை அறிவித்து பல அலுவலகங்களும் 'ஜெயிலர்' கொண்டாட்டத்தில் இணைந்துள்ளன.
மேலும் படிக்க | கமல்-ரஜினி to விஜய்-அஜித்..! இவர்கள் உண்மையில் நண்பர்களா..? எதிரிகளா..?
'ஜெயிலர்' படக்குழு, ரஜினியின் ரசிகர்களுக்கு வழக்கமான அப்டேட்களை வழங்குவதன் மூலமும், படத்தை சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக வைத்திருப்பதன் மூலமும் ஒரு சிறந்த பிரமோஷனை செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஃபீவர் நியூயார்க் நகரத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் கூட அடித்தது.
வெளிநாடுகளில் 'ஜெயிலர்' படத்திற்கான முன்பதிவுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதே நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில திரையரங்குகளில் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. 'ஜெயிலர்' திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டின் 90 சதவீத திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் படம் ரஜினிகாந்திற்கு ஒரு சாதனை ஓப்பனிங் வசூலை அளிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' ஒரு ஆக்ஷன் என்டர்டெய்னராக இந்த படம் தயாராகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக வயதான வேடத்தில் காணப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் ஒரு சிறப்பு காட்சியில் படத்தைப் பார்த்த படக்குழு படம் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளது.
ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், 'காவாலா', 'Hukum','ஜூஜூபி' என மூன்று பாடல்கள் முன்னதாகவே வெளியிடப்பட்டு பெரிதும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 28) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் அனைத்து பாடல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, ஜெயிலர் ஆல்பத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.
காவாலா, Hukum பாடல்கள் யூ-ட்யூபில் தினந்தினம் அதிக பார்வையாளர்களை பெற்று வருகின்றன. படத்தின் வெளியீடும் நெருங்கி வருவதால் படக்குழுவும் அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்வண்ணம் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகின்றன.
மேலும் படிக்க | 'ஜெயிலர்' எப்படி இருக்கு..? படம் பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ