'ஜெயிலர்' எப்படி இருக்கு..? படம் பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்..!

Jailer Review: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தை பார்த்த பிரபலம் ஒருவர் தன் டிவிட்டர் பக்கத்தில் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 5, 2023, 07:27 AM IST
  • ஜெயிலர் படம் வரும் 10ஆம் தேதி வெளியாகிறது.
  • படத்தை திரைப்பிரபலம் ஒருவர் பார்த்துள்ளார்.
  • ஜெயிலர் படத்திற்கு தன் டிவிட்டர் பக்கத்தில் விமர்சனமும் கொடுத்துள்ளார்.
'ஜெயிலர்' எப்படி இருக்கு..? படம் பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்..! title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடத்துள்ள படம், ஜெயிலர். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம், வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஒரு பிரபலம் பார்த்துள்ளார். அதன் பிறகு அவர் தனது விமர்சனத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பிரபலத்தின் விமர்சனம்..!

எந்த படமும் திரையிடப்படுவதற்கு முன்பு, அப்படத்தில் நடித்துள்ளவர்கள் மற்றும் அப்படத்தில் வேலை பார்த்தவர்களுக்கென தனியாக ஒரு சில காட்சிகள் அல்லது முழு படமே காண்பிக்கப்படும். அப்படி ஜெயிலர் படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத்திற்கும் படம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தை பார்த்த அனிருத், தனது டிவிட்டர் பக்கத்தில் அதற்கான விமர்சனத்தை எமோஜியை வைத்து பகிர்ந்துள்ளார். 

கப், ஃபையர் சிம்பிளை போட்டு ஜெயிலர் படத்தையும் தன் ஹேஷ்டேக்கில் இணைத்துள்ளார் அனிருத். இதைப்பார்த்த ரசிகர்கள் படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என கருதுகின்றனர். 

மேலும் படிக்க | பிரபல சீரியல் நடிகையில் கணவர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

“இந்த வாட்டி மிஸ் ஆகாது..”

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர்களான ரஜினிகாந்த், தமன்னா, நெல்சன், அனிருத், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது மேடையேறி பேசிய அனிருத், “இந்த முறை கண்டிப்பாக மிஸ் ஆகாது நெல்சா…” எனக்கூறினார். 

Jailer

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் ரசிகர்களை ஈர்க்க தவறியது. பாக்கிஸ்தான் நெட்டிசன்களிடையே கூட பீஸ்ட் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மீம் மெட்டீரியலாக மாறியது. இப்படி அனைத்து பக்கங்களில் இருந்தும் பீஸ்ட் படம் அடிவாங்கியதால் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தை ஒழுங்காக எடுத்து முடிப்பாரா என ரசிகர்கள் சந்தேகித்தனர். இதை நீக்கவே அனிருத் ஜெயிலர் பட விழாவில் அவ்வாறு பேசினார் என கூறப்படுகிறது. 

‘ஜெயிலர்’ பாடல்களுக்கு ரசிகர்களுக்கு வரவேற்பு…!

ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ கடந்த மாதம் வெளியானது. இந்த பாடல் தற்போது வரை இன்ஸ்டா உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. குழந்தைகள் உள்பட பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்பாடல் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. இதையடுத்து வெளியான பாடல், ‘ஹூக்கும்’ பாடல் வெளியானது. இப்பாடல் ஜெயிலர் படத்தில் வரும் ஹீரோவின் கதாப்பாத்திரத்திற்காக எழுதப்பட்டதா அல்லது ரஜினிக்காகவே எழுதப்பட்டதா என்று சந்தேகம் வந்தது. காரணம், வரிகள் யாவும் ரஜினியின் கெத்தை குறிப்பிடுவது போலவே இருந்தது. இந்த பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இதையடுத்து வெளியான ஜூஜூபி பாடல் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கவில்லை. 

அனிருத்தின் அடுத்தடுத்த படங்கள்:

தமிழ் திரையுலகை தாண்டி இன்று பான் இந்திய இசையமைப்பாளராக மாறிவிட்டார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து, இவர் இசையமைத்துள்ள இன்னும் பிற படங்களும் வெளியாக உள்ளன. குறிப்பாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இதில், அனிருத் தமிழ் மற்றும் இந்தி மொழியில் பாடல் பாடியுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ‘நா ரெடி’ பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திற்கும் அனிருத்தான் இசையமைப்பாளர். ஷங்கர் சமீபத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில், அனிருத்தின் இசைக்கு ஏற்ப தலையசைப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. ஜெயிலர் படத்தில் அனிருத் என்ன சம்பவம் செய்துள்ளார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

மேலும் படிக்க | முதல்வரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதி..! படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News