தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் விஷால் செய்தியார்களிடம் கூறியதாவது:


டிடிஹெச்சில் திரைப்படத்தை வெளியிடுவது பற்றி எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகள் மீது நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். 


திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தோம். திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்ட அறிவிப்பு வருத்தமளிக்கிறது. தயாரிப்பாளர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் சங்கம் முன் எடுக்கும். திரையரங்குகள் வேலைநிறுத்தம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.


இவ்வாறு அவர் கூறினார்.