சிறுவர் திரைப்பட கழகத்தின்தலைவர் சக்திமான் பதவி விலகுகிறார்!!
![சிறுவர் திரைப்பட கழகத்தின்தலைவர் சக்திமான் பதவி விலகுகிறார்!! சிறுவர் திரைப்பட கழகத்தின்தலைவர் சக்திமான் பதவி விலகுகிறார்!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/01/31/125179-mukesh-khanna.jpg?itok=itjT3ZYZ)
இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நடிகர் முகேஷ் கண்ணா தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் குழுத்தலைவராக பதவி வகித்து வருபவர் நடிகர் முகேஷ் கண்ணா. இவர் சக்திமான் சீரியல் மூலமாக குழந்தைகளின் மனதை கவர்ந்தவர்.
இதையடுத்து, மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், குழந்தைகளுக்கான படங்களை விளம்பரப்படுத்துவதற்காக ஒளிபரப்புத்துறை அமைச்சகம் போதிய நிதியை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பா.ஜ.க தலைமையிலான மோடி அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் குழுத்தலைவராக முகேஷ் கண்ணாவை நியமனம் செய்தது. மூன்றாண்டு காலம் தலைவராக இருப்பார் என்ற அடிப்படையில் அவர் நியமனம் செய்யப்பட்டார்.