GV Prakash Kumar Saindhavi Divorce Announcement: எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பகிர்ந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதல் திருமணம் செய்த ஜோடி:
ஜிவி பிரகாஷ், ஏ ஆர் ரகுமானின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும். சிறுவயதிலிருந்தே இசை உலகில் சாதித்து வரும் இவர் ‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சைந்தவியும் சிறுவயதிலிருந்தே இசைஞானம் பெற்ற திறமைமிகு பாடகியாக இருக்கிறார். 


சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள், ஒரு கட்டத்தில் காதல் ரிலேஷன்ஷிப்பை தொடர, அது பத்தாண்டுகளுக்கு முன்னர் திருமண உறவிலும் முடிந்தது. ஜிவி பிரகாஷ்-சைந்தவி ஜோடிக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். இந்த குழந்தை 2020 ஆம் ஆண்டு பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு நான்கு வயது ஆகிறது.


மேலும் படிக்க | பூரி ஜெகன்நாத் - ராம் பொதினேனி கூட்டணியில் உருவாகி உள்ள டபுள் ஐஸ்மார்ட்!


ஜிவி பிரகாஷ் சைந்தவியும் விவாகரத்து:
தமிழ் திரையுலகை சேர்ந்த காதல் ஜோடிகள் சமீப காலமாக தங்கள் விவாகரத்து அறிவிப்பினால் ரசிகர்களுக்கு மினி ஹார்ட் அட்டாக்கையே கொடுத்து வருகின்றனர். சமந்தா நாக சைதன்யா, தனுஷ் ஐஸ்வர்யாவை தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷ் சைந்தவியும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிய உள்ளதாக தகவல் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி மூக வலைதளப் பக்கத்தில், 



"ஜிவி பிரகாஷும் நானும் பிரிவதாக முடிவு செய்து உள்ளோம். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். நன்கு யோசித்து தான் இந்த முடிவை நாங்கள் எடுத்து உள்ளோம். நாங்கள் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்குள் தனிப்பட்ட இந்த முடிவை ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது தேவை எங்களது பிரவேசியை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 



"சைந்தவியும் நானும் பிரிவதாக முடிவு செய்து உள்ளோம். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். நன்கு யோசித்து தான் இந்த முடிவை நாங்கள் எடுத்து உள்ளோம். நாங்கள் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்குள் தனிப்பட்ட இந்த முடிவை ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது தேவை எங்களது பிரவேசியை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க | விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ