ராமாபுரம் தோட்டத்துக்கு செல்லும் திருவேற்காடு பிரசாதம் - சங்கர் கணேஷ் பகிர்ந்த ருசிகர தகவல்
எம்ஜிஆர் இருந்த வரை திருவேற்காடு பிரசாதம் மாத மாதம் அவரது வீட்டிற்கு சென்றுவிடும் என பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
படவேட்டம்மன் என்ற பெயரில் அம்மன் பாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. எஸ்.மியூசிக் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சுனில், இந்த ஆன்மீக பாடலை தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை முத்துக்குமார் எழுத, அனு ஆனந்த் பாடியுள்ளார். சிம்பொனி மியூசிக் நிறுவனத்தின் சார்பில் இந்த படவேட்டம்மன் பாடல் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் சிம்பு?
அப்போது விழாவில் பேசிய சங்கர் கணேஷ், அம்மனின் தீவிர பக்தன் என தெரிவித்தார். மாதா மாதம் திருவேற்காடு சென்றுவிடுவேன் எனத் தெரிவித்த, அந்த பிரசாதத்தை எம்ஜிஆர் இருக்கும் வரை ராமாபுரம் தோட்டத்துக்கு நேரில் சென்று கொடுத்து வந்தேன் எனக் கூறினார். நான் அம்மனின் செல்ல பிள்ளை. இந்த படவேட்டம்மன் பாடல் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக பாடலில் நடனம் ஆடிய ஹரினியும், அம்மனும் ஒன்றாக இருந்தார்கள். நான் இருவர் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பாடல் வரிகளும், இசையும், பாடிய விதமும் சிறப்பு.
தயாரிப்பாளர் சுனில் நல்ல மனிதர், பாடலை மிக சிறப்பாக தயாரித்துள்ளார். அவருக்கு உறுதுணையாக அவருடைய மனைவி மும்தாஜ் இருந்திருக்கிறார். மும்தாஜ் என்ற பெயரை வைத்துக்கொண்டு அவர் படவேட்டம்மன் பாடலை தயாரித்திருக்கிறார். இதற்காகவே இவர்களை நாம் பாராட்ட வேண்டும்" எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய சிம்பொனி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீஹரி பேசும்போது, எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பாடல்களை மட்டுமே வெளியிட்டு வந்தோம். ஆனால், இந்தப் பாடல் மிகவும் தரமாக இருப்பதால், தங்கள் நிறுவனத்தின் சார்பில் வெளியிட ஒப்புக்கொண்டதாக கூறினார்.
மேலும் படிக்க | விஜய், அஜித் தவறவிட்ட வாய்ப்பு! பயன்படுத்தி கொண்ட சூர்யா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ