பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குனர் விஜய் மில்டன் திரைக்கதை அமைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் ஆண்ரூ லூயிஸ் இயக்கத்தில் கடந்த வாரம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கொலைகாரன்'. இந்த திரைப்படம் ரசிகர்களிடையை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் தற்போது ‘கொலைகாரன்' வெற்றியைத் தொடர்ந்து போப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை முன்னணி பைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து 'இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் விஜய் ஆண்ணடனி நடிக்கவுள்ளார்.


இந்த திரைப்படத்திலும் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க இருக்கின்றார். பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குனர் விஜய் மில்டன் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்குவதோடு, ஒளிப்பதிவும் செய்கிறார்.


தற்போது, இந்த படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அக்டோபர் 2019 முதல் கோவா, டையூ மற்றும் டாமன் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
 
விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் வேலைகள் முடிந்ததும் விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.