பேய் பட பிரியரா நீங்கள்? தைரியம் இருந்தால் இந்த 5 படங்களை இரவில் தனியாக பாருங்கள்..!
Must Watch Horror Films: உங்களுக்கு பேய் படங்களை பார்ப்பதென்றால் மிகவும் பிடிக்குமா..? இந்த படங்களை மிஸ் பண்ணாம இரவில் பாருங்கள்.
தமிழ் பேய் படங்கள்..
தமிழில் இப்போது வரும் பேய் படங்களில் நகைச்சுவை காட்சிகள் பல இணைக்கப்படுவதால் அது பேய் படமா என்ற சந்தேகமே நமக்கு வந்து விடுகிறது. ஆனால், இவையன்றி சில தரமான பேய் படங்கள் தமிழில் உள்ளன. மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘யாவரும் நலம்’ படம் அதற்கு சிறந்த உதாரணம். இந்த படம் வெளியான வருடங்களுக்கு கொஞ்சம் முன்னே சென்று பார்த்தால் இருப்பது, மீனா நடத்த ‘ஷாக்’ திரைப்படம். சிவி, ஜமீன் கோட்டை, 13ஆம் நம்பர் வீடி, லிஸா ஆகிய படங்களும் இதில் அடங்கும். சமீபத்தில் பீட்ஸா, ஜீரோ, அவள் ஆகிய படங்கள் நல்ல பேய் படத்தை பார்த்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்தன. இவை மட்டுமன்றி சில ஹாலிவுட் படங்களும் நல்ல பேய் படங்களின் லிஸ்டில் உள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
நம்மில் பலருக்கு ஒவ்வொரு வகையான படங்களை பிடிக்கும். ஒரு சிலருக்கு காதல்-காமெடி படங்கள் பிடிக்கும். ஒரு சிலருக்கு த்ரில்லர்-ஆக்ஷன் படங்கள் பிடிக்கும். ஸ்பெஷலான சிலருக்கு பேய்-த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பேய் பட பிரியர்கள் பலர், மயிர்கூச்சரிய செய்ய வைக்கும் அளவிற்கு பயத்தை கொடுக்கும் படங்களை தனியாக பார்க்க வேண்டும் என்று விரும்புவர். அப்படிப்பட்ட த்ரில்லிங்க் அனுபவ பிரியர்களுக்கான தொகுப்பு இது. உண்மையான பேய் பட பிரியராக இருந்தால் கண்டிப்பாக இந்த படங்களை மிஸ் பண்ணாம பாருங்கள்.
மேலும் படிக்க | சென்னையில் பேய் உலாவுவதாக கூறப்படும் இடங்கள்..இங்கு செல்கையில் உஷாராக இருக்கவும்..!
இட்:
ஹாரர் பட பிரியர்களுக்கு மிகவும் பரீச்சியமான எழுத்தாளராக இருப்பவர் ஸ்டீபன் கிங். இவர் எழுதிய IT என்ற நாவலை மையமாக கொண்டு அதே பெயரில் படமும் எடுக்கப்பட்டது. குழந்தைகளை மயக்கி அவர்களை சாப்பிடும் கோமாளி வேடம் போட்ட பேய்தான் படத்தின் ஹைலைட். அவனைத்தடுக்கும் முயற்சியில் சிக்கிக்கொள்ளும் சிறுவர்களின் கதி என்ன..? என்பது படத்தின் உச்சக்கட்டம். ரத்தம்-கொலை என கொஞ்சமும் பார பட்சம் பார்க்காமல் படத்தில் வைலன்டான காட்சிகள் காண்பிக்கப்பட்டிருக்கும். நீங்கள் தைரியமானவராக இருந்தால் இப்படத்தை இரவில் தனியாக பார்க்கவும். இதன் இரண்டு பாகங்களும் வெளியாகியுள்ளன.
தி ரிங்:
குழந்தையை பேயாக காண்பிக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் உதயமானே இந்த படத்தில் இருந்துதான் என கூறலாம். ‘ஒரு வீடியோ டேப், இதைப்பார்த்தால் 1 வாரத்தில் கண்டிப்பாக மரணம்..’ இதுதான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. இந்த கதை சிறுவயதிலேயே இறந்து போன ஒரு குழந்தையையும் அந்த ஆவியை விடுவிக்க போராடும் நாயகியையும் சுற்றி சுழலும். படத்தின் சைலன்ஸ்-அவ்வப்போது வரும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். இந்த படம் ப்ரைம் வீடியோவில் உள்ளது. நல்ல ஹாரர் அனுபவத்தை பெற விரும்பினால் இப்படத்தை இரவில் தனியாக பார்க்கவும்.
தி பர்ட் பாக்ஸ்:
பேயே இல்லாமலும் பயமுறுத்தும் வகையிலான அம்சங்கள் இருக்கும் படங்கள் ஹாலிவுட்டில் பல உள்ளன. அப்படிப்பட்ட படங்களுள் ஒன்று, தி பர்ட் பாக்ஸ். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை சான்ட்ரா புல்லக் நடித்திருப்பார். திடீரென்று உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு காரணத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கு காரணம், அவர்கள் ஒரு வித வித்தியாசமான வெளிச்சத்தை பார்ப்பதுதான். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக கண்களை கட்டிக்கொள்ள வேண்டும். இதுவே படத்தின் கதை. இப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தன் இரு பிள்ளைகளை வைத்துக்கொண்டு நாயகி படும் போராட்டம் படத்தின் உச்சக்கட்டம். படம், கண்டிப்பாக வித்தியாச பய அனுபவத்தை கொடுக்கும். இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உள்ளது.
டெட் சைலன்ஸ்:
ஒரு பொம்மைக்கும் பேய் புகுமா..? அப்படி புகுந்தால் என்ன நடக்கும்..? இதுதான் டெட் சைலன்ஸ் படத்தின் கதை. தன் சாவிற்கு காரணமாக இருந்தவர்களை தலைமுறை தாண்டி பழிவாங்கும் ஆவியின் கதை இது. இந்த படத்திற்று இன்றளவும் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு காட்சியும் நம்மை இறுக்கை நுணியின் இறுதிக்கே அழைத்து செல்லும் வைகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படம் யூடியூப்பில் ரெண்ட் கொடுத்த பார்க்கும் வசதியுடன் உள்ளது.
கான்ஜியூரிங்..
ஹாலிவுட்டை தாண்டி இந்தியாவிலும் பல தியேட்டர்களை ஆக்கிரமித்த பயங்கர பேய் படம், தி கான்ஜியூரிங். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. வீட்டில் அல்லது வீட்டில் தங்கியிருப்போருக்குள் புகுந்து கொள்ளும் பேய்களை விரட்டும் தம்பதிகளை வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு பல்வேறு பாகங்களும் வெளிவந்து விட்டன. இருப்பினும் முதல்பாகம்தான் இப்போது வரை ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருக்கிறது.
மேலும் படிக்க | ‘எதிர்நீச்சல்’ தாெடரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்..? இதோ முழு விவரம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ