Oppenheimer First Day Collection In India: பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் நேற்று திரைக்கு வந்துள்ள ஓபன்ஹைமர் திரைப்படம் அதன் முதல் நாளில் அதுவும் இந்தியாவில் நல்ல வசூல் சாதனையை படைத்துள்ளது. Batman Triology, Inception, Interstellar என உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் வியக்கப்படும், போற்றப்படும் படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன்.
மிகவும் தொலைநோக்கான, சிக்கலுக்குரிய விஷயங்களை கையாள்வதில் நோலன் கில்லாடி என பட்டத்தை வென்றவர். பலரும் யோசித்து கூட பார்க்க முடியாத அடுக்குகளுக்கு சென்று அதனை முழுமையாக வெளிப்படுத்துவது அவரின் படங்களில் நிறைந்திருக்கும். சமீபத்தில் வெளியான Dunkrik, Tenet படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு திரையரங்குகளில் வசூலை குவிக்காவிட்டாலும் அவரின் டிரேட்மார்க்கை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை.
இந்நிலையில், கிறிஸ்டோபர் நோலனின் இயக்கிய தற்போது வெளிலந்துள்ள ஓபன்ஹைமர் படம் இந்தியாவில், முதல் நாளான நேற்று ரூ. 13 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தியாவில் படத்தின் வசூல் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் ஒன் படத்தின் முதல் நாள் வசூலை விஞ்சியுள்ளது.
மேலும் படிக்க | Project K Budget: ப்ராஜெக்ட் கே படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
ஓபன்ஹைமர்...
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஓபன்ஹைமர் என்பவரின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம். இத்திரைப்படம் அணுகுண்டு-ன் தந்தை என்று அழைக்கப்படும் இயற்பியலாளர் ஜே ராபர்ட் ஓபன்ஹைமரை பற்றியது இப்படம். அணுகுண்டைச் சோதிப்பது வளிமண்டலத்தைப் பற்றவைத்து உலகையே அழிக்கும் என்பதை அவர் புரிந்துகொண்ட வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. ஜே ராபர்ட் ஓபன்ஹைமர் இரண்டாம் உலகப் போரின் போது அணு ஆயுதங்களைக் கண்டுபிடிக்க உதவினார்.
ஓபன்ஹைமரின் வருவாய்
Oppenheimer இந்தியாவில் அனைத்து மொழிகளையும் சேர்த்து (ஆரம்ப மதிப்பீடுகள்) முதல் நாளில் ₹13.50 கோடி நிகரமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாலிவுட் கோடைகால பிளாக்பஸ்டர்களின் மிகப்பெரிய மோதலில் ஓபன்ஹெய்மர், பார்பி திரைப்படத்தை எதிர்கொண்டது.
ஓபன்ஹெய்மர் நடிகர்கள்
பிரபல ஆங்கில் வெப்-சீரிஸான Peaky Blinders தாமஸ் ஷெல்பியாக இந்திய ரசிகர்களால் அறியப்படும் நடிகர் சிலியன் மர்பி இந்த படத்தில் ஓபன்ஹைமர் கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் மாட் டாமன், மன்ஹாட்டன் திட்டத்தின் தலைவரான ஜெனரல் லெஸ்லி க்ரோவ்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். எமிலி பிளண்ட் ஓப்பன்ஹைமரின் மனைவி கேத்தரின் ஓப்பன்ஹைமராகக் நடித்தார்.
ராபர்ட் டவுனி ஜூனியர் அமெரிக்காவின் அணுசக்தி ஆணையத்தின் மூத்த உறுப்பினரான லூயிஸ் ஸ்ட்ராஸாக நடித்தார். புளோரன்ஸ் பக், ஜோஷ் ஹார்ட்நெட், கேசி அஃப்லெக், ராமி மாலெக் மற்றும் கென்னத் பிரானாக் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.
ஓபன்ஹைமரின் விமர்சனம்
நோலன் படத்தை புரிந்துகொள்வது மேட்டுக்குடிதன்மையாக கருதப்படுகிறது. ஆனால், ஓபன்ஹைமரில் உரையாடல்கள் அதிகமிருப்பதால் மற்ற படங்களை விட இதனை எளிதாக புரிந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது. மேலும் படம் குறித்து நெட்டிசன்களும் கலவையான விமர்சனத்தை தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ