'திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். 2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். ஸ்வர்ணா ஸ்ரீ இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் தமிழ் சினி கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.நந்தகோபால் வெளியிடுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | VJ Archana: மாயா-பூர்ணிமாவுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா! வைரல் வீடியோ..


இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதன் போது மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்களும், நடிகர்களுமான ஆர். வி. உதயகுமார், பேரரசு, 'மஞ்சள் வீரன்' பட இயக்குநர் செல்லம், நடிகரும் தொழிலதிபருமான சூரிய நாராயணன், நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நடிகை அமிர்தா ஹல்தார் இயக்குநர் எம். முத்து, ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார், தயாரிப்பாளர் ஏ. சீனிவாசன் குரு கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


நடிகர் சாத்விக் வர்மா பேசுகையில், ''  தமிழ் திரையுலகில்  'சிக்லெட்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.  நடிகை அமிர்தா ஹல்தார் பேசுகையில், ''  'சிக்லெட்ஸ்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


'மஞ்சள் வீரன்' பட இயக்குநர் செல்லம் பேசுகையில், '' ஒரு தயாரிப்பாளர் திரைப்படம் தயாரிக்கிறார் என்றால்.., அதற்குப் பின்னால் சினிமாவை நம்பி இருக்கும் எத்தனை குடும்பங்கள் வாழ்கிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். தற்போதுள்ள கடினமான சூழலில் படத்தை தயாரித்திருப்பதற்காக தயாரிப்பாளரை நாம் மனதார பாராட்ட வேண்டும்.   இயக்குநர் முத்து ஏற்கனவே 'திறந்திடு சிசே' என்ற படத்தினை இயக்கியவர். அதன் பிறகு போராடி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் சிப்பிக்குள் இருக்கிற முத்து அல்ல சினிமாவுக்குள் இருக்கிற முத்து. அவர் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள். 
'' என்றார். 


இயக்குநர் எம். முத்து பேசுகையில், ''புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தின்  ஆன்மா சாந்தியடைய நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம். எங்களுடன் பணியாற்றிய இயக்குநரும், நடிகருமான மனோபாலா மற்றும் மயில்சாமி ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களுடன் இணைந்து பணியாற்றிய இணை இயக்குநரும், புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் விசுவாசியுமான வேலுமணியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.  'சிக்லெட்ஸ்' படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே தருணத்தில் இயக்கி இருக்கிறேன். இந்தப் படத்தின் கதையை கிரியேட்டிவ்  புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ படித்ததும் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு இந்த கதை பிடித்ததால், படமாக தயாராகி பிப்ரவரி இரண்டாம் தேதியன்று வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் தமிழ் சினி கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் S.நந்தகோபால் வெளியிடுகிறார். தெலுங்கில் எம் ஜி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எம். அச்சு பாபு வெளியிடுகிறார். இவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இயக்குநர் பேரரசு பேசுகையில், '' இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள், நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்டு, இதுபோன்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும். இதனை ஒரு ஆலோசனையாக முன் வைக்கிறேன்.   இப்படத்தின் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநரை, இயக்குநர் சங்கத்திற்கு வரவழைத்து பேசினோம். அவர் சிக்லெட்ஸ் படத்தின் கதையை விவரித்தார். உடனே இது போன்ற படத்தின் விழாவிற்கு அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்து தான் இங்கு வருகை தந்திருக்கிறேன். 


இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், '' இந்தப் படத்தைப் பற்றி இங்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பேசிவிட்டார்கள்.  அதனால் நான் படத்தைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் இங்கு படத்தின் டிரைலரை பார்த்தோம். ட்ரெய்லர் கண்களுக்கு விருந்தளித்தது. இங்கு அனைவரும் இளைஞர்கள் தான் ஆசை இல்லாத மனிதர்கள் யார்? ஆசை இல்லாதவர்கள் மனிதனே இல்லை. அதனால் இப்படத்தின் ட்ரெய்லருக்கு ஹாட்ஸ் ஆஃப்.  தயாரிப்பாளர் பாராட்டும் அளவிற்கு ஒரு இயக்குநர் இருக்கிறார் என்றால்.. அவரை நாமும் பாராட்ட வேண்டும். தயாரிப்பாளர் வேறு ஒரு படத்தின் பணிகளை நிறுத்திவிட்டு இப்படத்தின் இப்படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறார் என்றால், இதற்காக இயக்குநரை பாராட்ட வேண்டும். அவருக்கு ஆதரவாக நின்ற தயாரிப்பாளரின் புதல்வியையும் பாராட்ட வேண்டும். 'லவ் டுடே' படத்திற்குப் பிறகு இந்த 'சிக்லெட்ஸ்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். '' என்றார்.


மேலும் படிக்க | சலார் படத்தில் பிரபாஸ் வாங்கிய சம்பளம் மட்டும் இவ்வளவா..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ