முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக கருதப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3”  சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸில் முன்னணி நட்சத்திரங்களான ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மை 3:


'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற காமெடி பிளாக்பஸ்டர் வழங்கிய,  பிரபல இயக்குநர்  ராஜேஷ் எம் இந்த “மை3” சிரீஸை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 


இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.  இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” தயாரிப்பை Trendloud நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 


மேலும் படிக்க | “நாங்க சென்னை சிட்டி கேங்ஸ்ட..” சென்னையின் அருமை பெறுமையை பேசும் அழகான பாடல்கள்..!


“மை3” தொடரின் டைட்டில் அறிவிப்பை ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ் இணைந்து பிக்பாஸ் ஹவுஸ் நிகழ்ச்சியில் முன்னதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 


பல வருடங்களுக்கு பிறகு கூட்டணி..


2012ஆம் ஆண்டு வெளியான “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி இயக்குநர் ராஜேஷுடன் இணைந்து பணிபுரிந்திருந்தார். இதையடுத்து, கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குநர் ராஜேஷுடன் ‘மை 3’ தொடரில் கைகோர்த்துள்ளார் ஹன்சிகா. 


தொடர்கள் மற்றும் படங்களில் பணிபுரியும் ஹன்சிகா..


கடந்த ஆண்டு தனது காதலர் ஷோயல் கத்தூரியாவை கரம் பிடித்தார் ஹன்சிகா. தனது காதல் திருமணத்தை டாக்குமெண்டரி தொடராக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு, மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, அதே டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட இருக்கும் மை 3 தாெடரில் நடிக்கிறார். 


ஹன்சிகா, பாலிவுட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்திரங்கிய நாயகி. இருப்பினும், அவர் இந்தி படங்களை விட தென்னிந்திய மொழி படங்களிலேயே அதிகமாக கமிட் ஆகி வருகிறார். இவர் நடிப்பில் அடுத்து ‘பார்ட்னர்’ என்ற படம் வெளியாக உள்ளது. இதில் பிரபல நடிகர் ஆதியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதற்கான ப்ரமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. 


மேலும் படிக்க | மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ