ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹேல் கதுரியா யார் தெரியுமா?

ஹன்சிகா தனது காதலரான சோஹேல் கதுரியாவுடன் இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Nov 2, 2022, 02:58 PM IST
  • தனது காதலரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா.
  • மும்பை தொழில் அதிபரை திருமணம் செய்ய திட்டம்.
  • இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹேல் கதுரியா யார் தெரியுமா? title=

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் தான் ஹன்சிகா மோத்வானி, இவரது க்யூட்டான நடிப்பும், செயலும் ரசிகர்களை கவர்ந்தது.  தமிழில் விஜய், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் மற்றும் சிம்பு போன்ற பல நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.  நடிப்பால் பலரை கவர்ந்தது மட்டுமின்றி, செயலாலும் பலரை கவர்ந்தவர் இவர், சில குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டியதை செய்து வளர்த்தும் வருகிறார்.  எல்லா நடிகைகளையும் போல இவரை பற்றியும் அடிக்கடி சில கிசுகிசுக்கள் எழுந்தது, சமீபத்தில் ஹன்சிகாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடக்க இருப்பதாக சில செய்திகள் வெளியான நிலையில் தற்போது தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் யார் என்று நடிகை ஹன்சிகா உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.  

மேலும் படிக்க | நித்தம் ஒரு வானம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

ஹன்சிகா தனது காதலரான சோஹேல் கதுரியாவுடன் இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இதனை கண்டத்திலிருந்து ரசிகர்கள் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்த சோஹேல் கதுரியா யார் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் கட்டி வருகின்றனர்.  சோஹேல் கதுரியா மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார், இவருடன் தொழில் ரீதியாக ஹன்சிகா கூட்டணி அமைத்து பல வேலைகளை ஒன்றாக செய்து முடித்திருக்கிறார்.  ஆரம்ப காலகட்டத்தில் நண்பர்களாக இருந்து வந்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர்.  பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர் முன் ஹன்சிகா அழகான உடையணிந்து நிற்க, அவரின் முன்னால்  சோஹேல் கதுரியா மண்டியிட்டு ப்ரொபோஸ் செய்வது போன்ற ரொமான்டிக்கான புகைப்படத்தை நடிகை ஹன்சிகா பகிர்ந்துள்ளார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

ஹன்சிகா மற்றும் அவரது காதலர் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, அந்த புகைப்படத்துடன் ஹன்சிகா "இப்போதும் & எப்போதும்" என்கிற கேப்ஷனுடன் இதய எமோஜியையும் பதிவிட்டு இருக்கிறார்.  இந்த போஸ்டுக்கு ஹன்சிகாவின் காதலர் சோஹேல் கதுரியா "ஐ லவ் யூ மை லைஃப் #NowAndForever" என்று பதிலளித்துள்ளார்.  இவர்கள் தங்களது திருமண தேதி குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை, இருப்பினும் இவர்களது வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  மெஹந்தி மற்றும் சங்கீத் டிசம்பர்-3ம் தேதியும், 4ம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News