'விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் பலராலும் விரும்பப்படும் ஒரு இயக்குனராக மாறியுள்ளார்.  தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்கவிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.  விஜய் - லோகேஷ் இருவரின் காம்போவில் உருவாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் லோகேஷ் சுவாரஸ்யமாக கூறிய ஒரு வரியை தற்போது முழுக்கதையாக உருவாக்கியிருக்கிறார்.  இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்த நிலையில், பலரும் இயக்குனர் மீது கவனத்தை திரும்பியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தமிழ் சினிமாவின் பீஸ்ட் ஆகா தளபதி விஜய் திகழ்வதற்கு காரணம்!


தனது அடுத்த படம் நடிகர் விஜய்யுடன் தான் என்று உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை இயக்குனர் லோகேஷ் கூறாமல், தனது அடுத்த தீவிரமான பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும் என்று மட்டும் கூறியிருக்கிறார்.  இந்த படத்தின் கதை ஏற்கனவே எழுதப்பட்ட பழைய கதை என்றும், தற்போது அந்த கதையினை மீண்டும் இயக்குனர் லோகேஷ் எழுதி வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கிறது.  மேலும் இயக்குனர் லோகேஷ் தான் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய அதே தொழில்நுட்ப குழுவுடன் தான் அடுத்த படத்திலும் பணியாற்ற இருப்பதாக உறுதி செய்திருக்கிறார்.



லோகேஷ் மற்றும் விஜய் இணைந்து பணியாற்றப்போகும் 'தளபதி 67' படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.  எப்படியும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  தற்போது விஜய் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார், 'தளபதி 66' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு தற்போது 'வாரிசு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பீஸ்ட் பார்ட் 2 தான் ஜெயிலரா? லோகேஷ் பாணியில் நெல்சன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR