இந்த போட்டியாளருக்கும் மைனாவுக்கும் இப்படி ஒரு உறவா? லீக்கான தகவல்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புதிதான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் உறவினர்களாக இருப்பவர்கள் யாரும் இருந்தது இல்லை, ஆனால் தற்போது இந்த சீசனில் பங்கேற்றுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து அந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் கடந்த வாரம் அசல் கோளாறு அவர் செய்த சில கோளாறான செயல்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து வாராவாரம் நடக்கும் வெளியேற்று படலத்தில் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன் மற்றும் ஷெரினா போன்ற போட்டியாளர்கள் இருந்தனர். அதில், தற்போது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ஷெரினா வெளியேறப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | வருங்கால கணவரின் முதல் திருமணத்திலேயே நடனமாடிய ஹன்சிகா... வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் தற்போது மைனா நந்தினி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் பிரபலம் ஏ டி கே, மைனா நந்தினிக்கு உறவுக்காரன் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் உறவினர்களாக இருப்பவர்கள் யாரும் இருந்தது இல்லை, ஆனால் தற்போது இந்த சீசனில் பங்கேற்றுள்ளனர். ஏடிகே, மைனாவின் மாமன் மகன் தானாம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ஏடிகே-வின் முன்னாள் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
யார் ஏடிகே?
இதற்கிடையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஏடிகே. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ஆரியன் என்ற இசை ஆல்பத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இவருடைய முழு பெயர் தினேஷ் கனகரத்தினம். மேலும், விஜய் ஆண்டனி, டி இமான், ஏ ஆர் ரகுமான், சந்தோஷ் நாராயணன், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தனியாகவும் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தூரத்துலதான்டா காமெடி கிட்ட பார்த்தா டெரர்டா... வில்லனாகிறார் வடிவேலு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ