தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் பல ஆண்டுகளாக சில அற்புதமான படங்களை வழங்கியிருந்தனர் மற்றும் மிஷ்கின் (Mysskin) இந்த பட்டியலில் உள்ள தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் தனது அற்புதமான படைப்புகளுக்காக ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வென்றார், அந்த வகையில் இன்று மிஷ்கின் (Mysskin) தனது பிறந்த நாளை ஒரு சிறப்பு வழியில் கொண்டாடி வருகிறார். தகவல்களின்படி, மிஷ்கின் தனது பிறந்த நாளை கிளாசிக் தமிழ் இயக்குநர்கள் குழுவுடன் கொண்டாடினார்.


 


ALSO READ | மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'பிசாசு 2'.....இவர்தான் கதாநாயகி...


இந்த நிகழ்வை இயக்குநர் மணிரத்னம் தனது வீட்டில் நடத்தி மிஷ்கினுக்கு சூப்பர் சர்பரைஸ் கொடுத்துள்ளார். இதில் இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், சசி, லிங்குசாமி, கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், பாடகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். இணையத்தில் வெளியான இவர்களின் போட்டோஸ் வைரல் அடித்து வருகிறது. 


 



 


 


இயக்குனர் மிஷ்கின் (Mysskin) இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்மையில் இவர் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் சைக்கோ திரைப்படத்தை இயக்கினார். தற்போது இவர் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார்.


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR 


ALSO READ | Crime/Thriller திரைப்படத்தை இயக்கி வெளியிட மிஷ்கினுக்கு தடை!