மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'பிசாசு 2'.....இவர்தான் கதாநாயகி...

பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்குகிறார்.

Last Updated : Sep 20, 2020, 10:54 AM IST
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'பிசாசு 2'.....இவர்தான் கதாநாயகி... title=

பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மிஷ்கின் (Mysskin) பிசாசு-2 (Pisaasu II) படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை ஆன்ட்ரியா (Andrea Jeremiah) கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும்,‘சைகோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி, முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“மிஷ்கின் இன் பிசாசு முதல் பாகம் இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் படமாக இருந்தது. இந்த படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது இதன் இரண்டாவது பாகம் ரெடியாகி வருகிறது. முதல் பாகத்தை விட, நூறு மடங்கு அதிக திகில் காட்சிகள் இடம்பெறும் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இதன் முழு படப்பிடிப்பும் நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் நடைபெறுகிறது.

 

ALSO READ | ஆண்ட்ரியா பற்றி நீங்கள் அறியாத 3 விஷயங்கள்.....Read Quickly...

படத்தை பற்றி டைரக்டர் மிஷ்கின் கூறியதாவது:- “பிசாசு-2, முழுக்க முழுக்க பேய் கதையாக தயாராகிறது. இது, சிரிப்பு பேய் அல்ல. ஆக்ரோசமான பேய். முதல் பாகம் தொடர்பான சில காட்சிகள் அமைந்திருக்கும். முதல் பாகத்தை விட, நூறு மடங்கு அதிகமாக திகில் காட்சிகள் இடம்பெறும். படத்தில், மிக பயங்கரமான பயமுறுத்தல்களும், மிரட்டல்களும் இருக்கும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றார்.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

ALSO READ | கொரோனாவிற்கு எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை இது தான் - விஷால்!

Trending News