மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இந்தப் படத்தில் நடிகர்கள் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘மாறா’, ‘குதிரைவால்’ திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ‘வால்டர்’, ‘செல்ஃபி’ படங்களைத் தொகுத்த எஸ்.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் முதன்முறையாக  ‘டெவில்’ படத்தின் மூலமாக  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


மேலும் படிக்க | Crypto Scams: அதிகரிக்கும் கிரிப்டோ மோசடிகள்: மற்றுமொரு பொன்சி மோசடியில் சிக்காதீர்கள்


மிஷ்கின் இதற்கு முன் பல பாடல்கள் எழுதி, பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ‘டெவில்’ திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இசையமைத்து கொடுத்துள்ளார். விரைவில் இந்தப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


இதற்கு முன் தமிழ் சினிமாவில் கே. பாக்யராஜ் இயக்குநராக இருந்து இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருந்தார். தற்போது அந்த வரிசையில் மிஷ்கின் இணைந்திருக்கிறார். மிஷ்கின் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கியிருக்கிறார். அது விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வளைகுடா பகுதிகளின் விமான கட்டணங்களில் கடும் ஏற்றம்: நடவடிக்கை தேவை என எம்பி கோரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR