வளைகுடா பிராந்திய விமானக் கட்டணங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தப்பட்டதைக் குறித்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்பி ஒருவர் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு ‘அவசர’ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சிபிஐ(எம்) மாநிலங்களவை எம்பி டாக்டர் வி.சிவதாசன், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஜூன் 25 அன்று கடிதம் எழுதி, விமானக் கட்டண உயர்வைக் கண்காணிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
கோடை காலத்தில், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கான பயணக் கட்டணங்கள் ஜூலை 1 முதல் சுமார் நான்கு மடங்காக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள பள்ளிகள் கோடைகாலத்திற்கு மூடப்படுவதால், பல வெளிநாட்டவர் குடும்பங்கள் விடுமுறைக்காக சொந்த நாடுகளுக்கு செல்கிறார்கள்.
மேலும் படிக்க | வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அதிர்ச்சி: விமான கட்டணத்தில் 2 மடங்கு ஏற்றம்
எம்பி சிவதாசன், "வளைகுடா நாடுகளில் கோடை விடுமுறைக்கான காலம் இது. மேலும், இது பக்ரீத் (ஈத் அல் அதா) பண்டிகை காலம், இவற்றின் காரணமாக பயணிகளின் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால், விமான நிறுவனங்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கான விமானக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன.” என தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “இந்தக் கட்டண உயர்வு, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"கோவிட்-19 மற்றும் பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்டுள்ள பெரும் நிதி அழுத்தத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உங்கள் அன்பான தலையீட்டை நான் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் தாய்நாட்டிற்கு வர காத்திருக்கும் இந்தியர்கள் விமான நிறுவனங்களின் இந்த செயலால் பிரச்சனைக்கு ஆளாகாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று டாக்டர் சிவதாசன் கூறினார்.
இந்த பிரச்சனையில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலையிட்டு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, சென்னை-அபுதாபி, திருவனந்தபுரம்-துபாய், கொச்சி-துபாய் ஆகிய வழித்தடங்களின் விமான டிக்கெட்டுகள் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பயண டிக்கெட் விலை அதிகரிப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் வினாம நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போதுதான் பள்ளி அமர்வு விடுமுறைக்கு பிறகு தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் பலர் இந்தியாவுக்கு வருகின்றனர். பயணிகளின் போக்குவரத்து அதிகமாக இருக்கும் காலமாக இது இருப்பதால், தற்போது கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
மேலும், சென்னையிலிருந்து துபாய்க்கு ஒரு நாளில் இயக்கப்படும் விமாங்களின் எண்ணிக்கையும் சமீப காலங்களில் குறைந்துள்ளது. இதுவும் கட்டண உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
மேலும் படிக்க | UAE வாகன ஓட்டிகள் கவனத்திற்கு; இந்த விதிகளை மீறினால் கடும் அபராதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR