நடிகர் மன்சூர் அலிகான், சில நாட்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷா குறித்து தகாத வகையில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். இது மிகப்பெரிய விவகாரமாக வெடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்ச்சையான மன்சூர் அலிகானின் கருத்து..


தமிழ் திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் மன்சூர் அலிகான், சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், லியோ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது, “லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடிக்க போகிறோம் என்று மிகவும் ஆனந்தமாக இருந்தேன். இதில், எனக்கு முந்தைய படங்களில் இருந்தது போல கற்பழிப்பு காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். ஆனால், காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்த போது த்ரிஷாவை கண்ணில் கூட காட்டவில்லை” என்று கூறியிருந்தார். இதில் இவர் த்ரிஷா குறித்து பேசிய ஆபாச கருத்துகளுக்கு திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்தனர். 


மேலும் படிக்க | படப்பிடிப்பு தளத்தில் கங்கனா.. திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்


தேசிய மகளிர் ஆணையம் வழக்கு..


நடிகை த்ரிஷாவின் விவகாரத்தில் பலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையமும் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.



அதில்,  “நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் தானாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களைப் பயன்படுத்துமாறு டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம். இது போன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகிறது, இவை கண்டிக்கப்பட வேண்டியவை” என்று கூறியுள்ளது. இதை நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். 


மன்சூர் அலிகானுக்கு தொடர் கண்டனம்..


நடிகர் மன்சூர் அலிகான், சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறை அல்ல. லியோ இசை வெளியீட்டு விழாவின் போதே, த்ரிஷா குறித்து தற்போது பேசியுள்ளது போன்ற ஒரு கருத்தைதான் மேடையில் பேசினார். அப்போது பலர் இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். த்ரிஷா குறித்து அவர் தெரிவித்துள்ள இந்த ஆபாச கருத்துக்கு அவர் வருந்தாதது போன்று சில நாட்களுக்கு முன்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், “த்ரிஷா குறித்து நான் உயர்வாகத்தான் பேசினேன். அதை எடிட் செய்து த்ரிஷாவிடம் காண்பித்திருக்கின்றனர். என்னை பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே செய்யும் வேலை இது” என்று தெரிவித்திருந்தார். இதிலிருந்து அவர் கூறியது தவறு என்றே அவர் புரிந்து கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் புரிந்தது. இந்த நிலையில், லியோ படத்தில் இருவருடனும் சேர்ந்து வேலை பார்த்த லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, பாடகி சின்மயி, குஷ்பூ, அர்ச்சனா கல்பாத்தி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு எதிரான தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டிருந்தனர். 


மேலும் படிக்க | மன்சூர் அலிகானை விளாசிய த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு.. என்னதான் விவகாரம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ