த்ரிஷா குறித்த அவதூறு பேச்சில் மன்சூர் அலிகான் தந்த அலட்சிய விளக்கம்

Mansoor Ali Khan - Trisha Clash: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் அருவருத்தக்க பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 19, 2023, 10:48 AM IST
  • மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி அருவருக்கத்தக்க பேசிய வீடியோ வைரல்.
  • பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  • நடிகர் மன்சூர் அலிகான் அலட்சிய விளக்கம்.
த்ரிஷா குறித்த அவதூறு பேச்சில் மன்சூர் அலிகான் தந்த அலட்சிய விளக்கம் title=

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் அருவருத்தக்க பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அலட்சியமாக விளக்கமளித்துள்ளார். இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் "த்ரிஷாவுடன் லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது; குஷ்பூ, ரோஜாவை மெத்தையில் போட்டது போல் த்ரிஷாவை தூக்கிப்போட முடியவிக்கௌ என ஆபாசமான முறையில் பேசியிருந்தார்". இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | படப்பிடிப்பு தளத்தில் கங்கனா.. திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்

பதிலடி கொடுத்த த்ரிஷா:
இதற்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா  "மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்துள்ளது. நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன், மேலும் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு மற்றும் மோசமான ரசனையைக நான் காண்கிறேன். அவருடன் சேர்ந்து இனி நடிக்கமாட்டேன். அவர் மனித குலத்துக்கே இழுக்கு" என காட்டமான பதிலடி கொடுத்திருந்தார்.

கொந்தளித்த திரையுலகம்:
இதனிடையே த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன், நடிகை குஷ்பூ, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் மன்சூர் அலிகான் அலட்சிய விளக்கம்:
இந்நிலையில் தற்போது தனது பேச்சு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., " 'அய்யா' பெரியோர்களே. திடீர்னு த்ரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு, பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல, நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடுறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவி விட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஞ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க.

பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்லன்னு ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சறவனா? த்ரிஷாக்கிட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா, என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்எல்ஏ, எம்.பி, மந்திரின்னு ஆயிட்டாங்க. பல கதாநாயகிகள் பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க.

மேலும், ‘லியோ’ பூஜையிலேயே என் பொண்ணு தில்ரூபா உங்களோட பெரிய ரசிகைன்னு த்ரிஷாக்கிட்ட சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கறவன் என எல்லாருக்கும் தெரியும். த்ரிஷாக்கிட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவை பார்க்கும் போது மன்சூர் அலிகான் துளியும் வருந்தியதாகவோ அள்ளது தவறை உணர்ந்ததாகவோ தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News