ராம்கோ குழுமத்தில் ஒரு புதிய நட்சத்திரம் சந்தியா ராஜு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல குச்சிபுடி நாட்டிய கலைஞரும், பிரபல தொழில் நிறுவனமான ராம்கோ குழுமத்தின் தலைவர் திரு. பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகளுமான சந்தியா ராஜூ தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ‘நாட்டியம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.


புகழ்மிக்க நடனக்கலைஞரான சந்தியா ராஜூ இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா இயக்கியுள்ள “நாட்டியம்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். பல்வேறு வகையான நடனங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு காதல் கதையாக இப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


சமஸ்கிருத மொழியில் காதம்பரி என்ற காதல் நாவலின் கதையை இந்த படம் சொல்கிறது என்று டீஸர் சுட்டிக்காட்டுகிறது. படம் மிகவும் சிக்கலான கதைக்களத்தைக் கொண்டுள்ளது போல் தோன்றுகிறது.


இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஷ்ரவண் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். பிரபல திரைப்பட விநியோகஸ்தரான திரு.தில்ராஜூ ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழியில் இப்படத்தை விநியோகம் செய்கிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் போஸ்டரை ‘அப்போலோ’ மருத்துவமனைக் குழுமத்தைச் சேர்ந்த உபாசனா காமினேனி கொண்டிலா அறிமுகம் செய்தார். இந்தத் திரைப்படத்தின் டீசரை (Teaser) தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். யூ டியூபில் வெளியிட்டுள்ளார்.



ஜூனியர் என்.டி.ஆர் (Junior NTR) புதன்கிழமை ‘நாட்டியம்’ படத்தின் டீசரை லாஞ்ச் செய்ததோடு படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். ஆர்.ஆர்.ஆரின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தபோதிலும், 37 வயதான நடிகர் கிளாசிக்கல் நடனத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஊக்குவித்து மக்கள் முன் கொண்டு வர நேரம் ஒதுக்கியுள்ளார்.



ALSO READ: Super Star பற்றிய சூப்பர் செய்தி: இந்த இயக்குனருடன் மீண்டும் கரம் கோர்க்கிறாரா ரஜினி?


கமல் காமராஜு ‘நாட்டியம்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புகழ்பெற்ற நடனக் கலைஞர் ரோஹித் பெஹல் நாயகியின் காதலன் வேடத்தில் நடிக்கிறார்.


ரேவந்த் கோருகொண்டா இப்படத்தை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கையும் கையாண்டுள்ளார். கருணகர் ஆதிகர்லா பாடல்களை எழுதியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஹோம் பேனரின் கீழ் படத்தை வெளியிடுகிறார்.


2016 ஆம் ஆண்டில், ரேவந்த் இயக்கிய ‘நாடியம்’ என்ற 40 நிமிட குறும்படத்தில் சந்தியா ராஜு நடித்தார். திருமண வாழ்க்கையின் குழப்பத்தில் சிக்கி, நடனத்தின் மீதான தனது ஆர்வத்தை மீண்டும் கண்டுபிடிக்க முயற்சிக்கும் கல்யாணி என்ற இல்லத்தரசி வேடத்தில் அவர் நடித்தார். மலையாள திரைப்படமான கேர்ஃபுல் மூலம் திரைப்படங்களிலும் நடித்தார். சந்தியா பில்லியனர் தொழிலதிபர் பி.ஆர்.வெங்கேத்திரமா ராஜாவின் மகள் மற்றும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.


தொழில் துறையில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகள் முறையாக நடனம் கற்றவர். சிறந்த நடனக்கலைஞராக விளங்கும் நிலையில் அவர் திரைத்துறையிலும் முத்திரை பதிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: Oscars 2021 போட்டியில் இருந்து வெளியேறியது ‘ஜல்லிக்கட்டு’, உள்நுழைந்தது ‘பிட்டு’


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR