Health Benefits Of Jaggery Milk In Tamil: உங்களின் உணவில் வெள்ளைச் சர்க்கரையை சேர்த்துக்கொள்வதை தவிர்த்து வெல்லத்தை சேர்த்துக்கொண்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதில் பல கனிமங்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பது ஒருபுறம் இருக்க, இயற்கையாகவே இனிப்பு சுவையை வழங்குவதால் நிச்சயம் இதனை உணவோடு சேர்த்துக்கொள்ளலாம். ஒரு சிலர் கஞ்சி, கூழ் போன்றவற்றை அருந்தும்போது, வெல்லத்தை கடித்துக்கொள்வார்கள். அது வித்தியாசமான சுவையை அளிக்கும். அதேபோல், வீட்டில் செய்யப்படும் அதிக பலகாரங்களில் வெல்லமே பெரும்பாலும் சேர்க்கப்படும். அந்த வகையில், வெல்லம் நமது வீடுகளில் அதிகம் புழங்கும் பொருள்தான் எனலாம்.
அப்படியிருக்க வெல்லத்தை நீங்கள் தினமும் பாலில் கலந்து அருந்தினால் சுவையை அதிகமாக இருக்கும், உங்களின் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக, இரவில் நீங்கள் வெல்லம் கலந்த பாலை அருந்தினால், உடலுக்கு இதமளிக்கும். செரிமானம் சிறப்பாக இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகவும், சரும ஆரோக்கியத்திற்கும், நல்ல தூக்கத்திற்கும் இது உதவியளிக்கும்.
குறிப்பாக, சில உடல்நலப் பிரச்னைகளுக்கு வெல்லம் கலந்த பால் சிறப்பான நிவாரணியாகவும் இருக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, வயிற்றுக்கோளாறு ஏற்பட்டாலோ, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருந்தாலோ நீங்கள் வெல்லம் கலந்த பாலை எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் இரவில் நீங்கள் வெல்லம் கலந்த பாலை அருந்துவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | பயணம் செய்யும்போதெல்லாம் குமட்டல் வருகிறதா? இனி கவலைப்படாதீங்க..!
எலும்புகளை வலுவாக்கும்
வயது ஏற ஏற எலும்புகளில் தொய்வு ஏற்படும். இதனை தடுத்து, எலும்புகளை வலுவாக்க தூங்குவதற்கு முன் வெல்லம் கலந்த பாலை அருந்த வேண்டும். மேலும், இதனால் எனாமலும் வலுவாகும், பற்சிதைவு பிரச்னை தவிர்க்கலாம். பல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நல்ல தூக்கம்
இதில் உள்ள மேக்னீஸியம் உங்களின் நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தும் ஒன்றாகும். இது தசைகளுக்கு தளர்வை கொடுக்கும். மன அழுத்தம் குறைந்து மன அமைதி ஏற்படும். இதனால் இரவில் தூக்கத்திற்கு எவ்வித பிரச்னையுமே இருக்காது. எனவே, படுக்கைக்கு செல்லும் முன் வெல்லம் கலந்த பாலை அருந்தலாம். நன்றாக தூங்கினால் அடுத்த நாள் காலையில் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.
சரும ஆரோக்கியம்
வெல்லத்தில் செலினியம், துத்தநாகம் ஆகியவை இருக்கின்றன. இது சருமத்திற்கு நன்மை பயக்கும். இளம் வயதிலேயே மிகவும் வயதான தோற்றம் சிலருக்கு இருக்கும். இதனை தடுக்க செலினியம் உதவும். மேலும், துத்தநாகம் சருமத்தை இருக்கமாக வைத்திருக்க உதவும்.
செரிமானத்திற்கு உதவும்
பால் மற்றும் வெல்லம் இரண்டுமே செரிமானத்திற்கு நன்மை அளிக்கக் கூடியவை. இவை இரண்டும் சேர்ந்தால் வயிறு சார்ந்த பிரச்னைகள் ஓடோடிப் போகும். இதன்மூலம் உங்களுக்கு அதிக நார்ச்சத்து கிடைக்கும். எனவே, மலச்சிக்கல் ஏற்படாது, குடல் இயக்கமும் சீராக இருக்கும். இதனால் அடுத்த நாள் காலையில் உங்களுக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | விந்தணுக்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களே உடனே செய்யவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ