திரைத்துறையைச் சார்ந்த 12000 குடும்பங்களுக்கு உதவிய நவரசா!
தமிழ் சினிமாவின் 9 முன்னணி இயக்குனர்கள் இணைந்து நவரசா என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கி இருந்தனர்.
தமிழ் சினிமாவின் 9 முன்னணி இயக்குனர்கள் இணைந்து நவரசா என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கி இருந்தனர். நவரசம் எனப்படும் 9 உணர்வுகளான கருணை, நகைச்சுவை, ஆச்சர்யம், கோபம், அமைதி, தைரியம், பயம், அருவருப்பு, காதல் என்னும் உணர்ச்சிகளை மையப்படுத்தி ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒவ்வொரு பாகமாக மொத்தம் ஒன்பது பாகங்கள் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.
கவுதம் மேனன், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி, வஸந்த் எஸ். சாய், சர்ஜீன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ரதீந்திரன் ஆர்.பிரசாத் உள்ளிட்ட ஒன்பது இயக்குனர்கள் இணைந்து நவரசா (Navarasa) என்ற அந்தாலஜி படத்தை இயக்கி இருந்தனர்.
சூர்யா, ப்ரக்ய மார்ட்டின், விஜயசேதுபதி, ரேவதி, பார்வதி, அதர்வா, அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
ALSO READ | Navarasa Teaser: 9 கதைகள், 9 உணர்வுகள்; நவரசா டீசர்!
இத்திரைப்படம் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு நெட்பிளிக்ஸ் ஆன்லைன் ஓடிடி தளத்தில் கடந்த 6 ஆம் தேதி வெளியானது. கொரோனா நெருக்கடியை சமாளிப்பதற்கு இப்படத்தின் தயாரிப்பாளர் மணி ரத்னம் "இப்படத்திற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரக்கூடிய பணத்தை நேரடியாக பெப்சி ஊழியர்களுக்கு தரப்படும்" என கூறியிருந்தார். அதன்படி அவர் செய்தும் காட்டினார்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னம் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,"எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஒன்று கூடி ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் தம் நேரத்தையும் உழைப்பையும் நல்கி நவரசாவை உருவாக்கி அனைத்து இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.
உங்களுடைய இந்த பெயர் ஆதரவால் ஆறுமாதங்களுக்கு நாம் திரைத்துறையைச் சார்ந்த 12,000 குடும்பத்தினரின் வீட்டு தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது. உதவி என்பதை தாண்டி நம் கலை குடும்பத்தினருக்கு நம் அன்பை அக்கறையை நன்றியை உணர்த்த முடிந்தது. பெருமையில் நன்றி உணர்ச்சியில் மகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறோம் நாங்கள். நீங்களும் தானே? நீங்கள் இல்லாமல் இந்த மகிழ்ச்சி இல்லை மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | வலைத்தொடர் மற்றும் திரைப்படங்களை சந்தா இல்லாமல் Netflix-ல் இலவசமாகப் பாருங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR