வலைத்தொடர் மற்றும் திரைப்படங்களை சந்தா இல்லாமல் Netflix-ல் இலவசமாகப் பாருங்கள்!

மக்களுக்கும் சினிமா தியட்டர்களுக்கும் இடையிலான தூரத்தில் ஓடிடி இயங்குதளம் (OTT Platform) தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளது. இந்தியாவில் OTT ஆன்லைன் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 20, 2021, 07:01 PM IST
வலைத்தொடர் மற்றும் திரைப்படங்களை சந்தா இல்லாமல் Netflix-ல் இலவசமாகப் பாருங்கள்!

உலக அளவில் கொரோனா தொற்றுநோய் (Coronavirus) பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கோரதாண்டம் வருகிறது. இதன்மூலம் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகின்றனர். சிலபல விஷயங்களில் இருந்து மக்களை தூரப்படுத்தி உள்ளது. அவற்றில் ஒன்று திரையரங்குகள். இந்த நாட்களில் சினிமா தியேட்டர்களுக்கு செல்வதை மக்கள் முழுமையாக தவிர்த்துள்ளனர்.

மக்களுக்கும் சினிமா தியட்டர்களுக்கும் இடையிலான தூரத்தை பயன் படுத்திக்கொண்ட ஓடிடி இயங்குதளம் (OTT Platform), அங்கு தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளது. இந்தியாவில் OTT ஆன்லைன் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் OTT இல் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் லாபத்தை அளித்துள்ளது. இதில் அமேசான் பிரைம் (Amazon Prime), ஜீ 5 (Zee 5) மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவை அடங்கும்.

ALSO READ | Anime Shows: 2021 இல் 40 புதிய அனிமேஷன் சீரியல்களை Netflix அறிமுகப்படுத்தும்

இந்த தளங்களில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் அணுகலைக் கொண்டிருந்தாலும், இந்த நிறுவனங்களின் விலையுயர்ந்த சந்தா காரணமாக, பலர் இந்த தளங்களின் அணுகலை பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதுபோன்றவர்களுக்கு, நீங்கள் பணம் செலுத்தாமல் நெட்ஃபிக்ஸ் இல் உங்களுக்கு பிடித்த படத்தை எவ்வாறு இலவசமாகப் (Netflix for free) பார்க்க முடியும் என்பதை நாங்கள் சொல்லப்போகிறோம். அதாவது உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களைத் தராமல் பார்க்கலாம். 

பின்வரும் சில வழிகளை பின்பற்றுவதன் மூலம் நெட்ஃபிக்ஸ் திரைப்படம் இலவசமாகப் பாருங்கள்:

1. முதலில், உங்கள் தொலைபேசியின் இணையதளத்திற்கு (Google or Chrome) சென்று netflix.com/watch-free என தட்டச்சு செய்க.

2. அதாவது netflix.com/watch-free எனத் தட்டச்சு செய்த பிறகு, உங்கள் புதிய பக்கம் திறக்கும். அதில் நீங்கள் பல விருப்பங்களை காண்பீர்கள். 

3. இப்போது திரையில் தோன்றும் அனைத்து விருப்பங்களையும் கவனமாகப் பாருங்கள். பின்னர் திரைப்படம் அல்லது தொடர் என இருக்கும் இடத்திற்கு கீழ் வாட்ச் நவ் என்றஎன்பதை கிளிக் செய்க,

4. கிளிக் செய்த பிறகு, நெட்ஃபிக்ஸ் உள்ள திரைப்படம், நிகழ்ச்சி அல்லது தொடர் போன்றவற்றை நீங்கள் கண்டுகளிக்கலாம். 

ALSO READ | இலவசமாக Netflix மற்றும் Amazon Prime பெற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்!

இந்த வழிகளில் இலவசமாக  பார்க்கலாம். ஆனால் நெட்ஃபிக்ஸ் பிரபலமான வலைத் தொடரின் சில அத்தியாயங்கள் மட்டுமே இலவசம் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அவற்றைப் பார்க்க நீங்கள் சந்தா எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. 

இதற்காக உங்கள் பட்ஜெட்டின் படி, நீங்கள் சந்தாவை தேர்ந்தெடுக்கலாம். அனைவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப, நிறுவனம் நான்கு சந்தா தொகுப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் ஆரம்ப பேக் ரூ. 199 மற்றும் கடைசி பேக் ரூ .799 ஆகும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News