’மெஹந்தியில் கூட காதல்’ விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்பிரைஸ்
மெஹந்தியில்கூட காதல் கணவரை வியக்க வைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசம் காட்டியுள்ளார் நயன்தாரா.
கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்து முடிந்தது. பிரபல இயக்குநரும், நீண்ட நாள் காதலராக இருந்தவருமான விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி கரம் பிடித்தார். மகாபலிபுரத்தில் மிகப்பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தமிழ் திரையுலகின் உட்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வரை திருமணத்தில் கலந்து கொண்டு நட்சத்திர தம்பதிகளை வாழ்த்தினர்.
மேலும் படிக்க | ’புஷ்பா’ நாயகனை இயக்கும் பிரபல தமிழ் இயக்குநர் - அறிவிப்பு விரைவில்
இந்த திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த சிவப்பு கலர் உடை, பெண்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த டிசைன் குறித்து தகவல்கள் அண்மையில் வெளியான நிலையில், தற்போது மெகந்தி குறித்த தகவல் கிடைத்துள்ளது. நயன்தாராவுக்கு சரினா என்பவர் மெஹந்தி டிசைன் போட்டுள்ளார். மாண்டாலா என்ற டிசைன் மெஹந்தியை அவர் நயன்தாராவுக்கு போட்டுள்ளார். மெஹந்தியில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, டிசைனுக்கு நடுவே விக்னேஷ் சிவனின் முதல் எழுத்தும், நயன்தாராவின் முதல் எழுத்தும் சேர்ந்து WN என எழுதப்பட்டதாம். நயன்தாராவின் கூறியதால் அவர் எழுதியதாகவும், மெஹந்தி டிசைனுக்குப் பிறகு இதனைப் பார்த்து நயன்தாரா மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மெஹந்தி டிசைனர் சரினா பேசும்போது,"நயன்தாராவுக்கு மெஹந்தி டிசைன் போடப்போகிறேன் என எனக்கு முதலில் தெரியாது. அவருக்கு டிசைன் போடப்போகிறேன் எனத் தெரிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. டிசைனில் நயன்தாராவின் முதல் எழுத்தும், விக்னேஷ் சிவனின் முதல் எழுத்தும் சேர்ந்து இருக்குமாறு எழுதினேன். இதைப் பார்த்து அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். இதேபோல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குடும்பதினருக்கும் மெஹந்தி போட்டேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | 'ஜெயிலர்' வேடத்தில் மிரட்டும் அண்ணாத்த! - வெளியானது Thalaivar 169 டைட்டில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR