தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, ஆரம்ப காலத்தில் VJ-வாக இருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னிந்திய நடிகை நயன்தாராவை எல்லோருக்கும் நடிகையா தெரியும், ஆனால் தான் ஒரு நடிகையாக அறிமுகம் ஆவதற்கு முன்பு அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தது பலரும் அறிந்திராத விஷயம். 


நடிகை நயன்தாரா ஹரி இயக்கத்தில் சரத்குமருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னனி நடிகர்களுக்டன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் தனியாகவே ஸ்கோர் செய்யும் அளவுக்கு தென்னிந்தியாவின் உச்ச நடிகையாக உள்ளார்.



எனினும் அவர் ஐயா படத்தின் மூலம் தமிழகத்திற்கு அறிமுகம் ஆகும் முன்னரே மலையாலத்தின் ‘மனசினகாரே' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்துவிட்டார். ஆனால், அதற்கும் முன்பாக அவர் கைராலி தொலைக்காட்சியில் ஒரு 18 நிமிட நிகச்சியில், ‘பியூட்டி டாக்டர்' எனும் 5 நிமிட செக்மெண்டில் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த வாரம் (நவம்பர் 18) பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாராவுக்கு ஒரு சிறந்த பரிசாக பழைய ஞாபகந்த்தை தரும் வகையில் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அவரின் தொகுப்பாளினியாக பணியாற்றிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டது. நயன்தாரா  அந்த நிகழ்ச்சி நிறைவில் “மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் பார்க்கலாம், until then its டயானா, sining off" என்று பேசும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 


ஒரு தொகுப்பாளினியாக இருந்து இத்தனை தூரம் சினிமாத்துறையில் பயனித்து, தென்னிந்தியாவின் உச்ச நடிகையாக வளர்ந்துள்ள அவரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


கடைசியாக பிகில் படத்தில் நடித்த நயன்தாரா தற்போது "தர்பார்" வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். மேலும், "நெற்றிக்கண்" மற்றும் "மூக்குத்தி அம்மன்" ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.