தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா சமீபத்தில் அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கியிருந்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நயன்தாரா:


கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக நிலைத்து நிற்பவர், நயன்தாரா. கமலைத்தவிர, தமிழ் திரையுலகில் உள்ள பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நாயகியாக நடித்தாலும் இடையிடையே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்திருக்கும் படம்தான், அன்னபூரணி. இந்த படத்தில், சமையல் கலையில் நிபுணராக வேண்டும் என்ற ஆசையுடன் போராடும் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார். 


நயன்தாராவின் சம்பளம்..


ஆரம்பத்தில் ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பிருந்து கோடிகளுக்கு மாறினார். பான் இந்திய அளவில் வெளியான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க, நயன்தாரா ரூ.10 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் அன்னபூரணி படத்திற்காக வாங்கியுள்ள சம்பள விவரமும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடிக்க, நயன்தாரா ரூ.11 கோடி சம்பளமாக வாங்கியதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 


அன்னபூரணி படக்குழு..


அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இவர், ஷங்கரின் 2.0 மற்றும் இந்தியன் 2 படத்தின் கதைக்குழுவில் ஒருவர். அன்னபூரணி, இவரது முதல் படமாகும். நயன்தாராவிற்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்துள்ளார். சத்யராஜ், கார்த்திக் குமார், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளனர். 


மேலும் படிக்க | அனிமல் படத்தில் ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு..


தமிழ் ரசிகர்கள், முன்னர் நாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கும், அவர்களை மையப்படுத்தி எழுதும் கதைகளுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது. முன்னணி நாயகர்களுக்கு கொடுத்து வந்த ஆதரவை, நாயகிகளுக்கும் கொடுத்து வருகின்றனர். அதிலும், நயன்தாரா இந்தியா முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கடந்த சில ஆண்டுகளில் சம்பாதித்துள்ளார். அன்னபூரணி படத்தை பொறுத்தவரை, அவர் தனது கனவுகளை தொடுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் பிராமண பெண்ணாக நடித்துள்ளார். இதில், ஒரு பெண் தனக்கு பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் என்னென்ன மாதிரியான சிரமங்களை சந்திக்க வேண்டும் என்பதை காண்பித்துள்ளனர். இதனால், பல பெண்கள், அன்னபூரணி படத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.


அன்னபூரணி படத்தின் வசூல்..


சிரிய பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் நயன்தாராவின் அன்னபூரணி படம் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்துடன் சேர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் படமும், ரன்பீர் கபூரின் அனிமல் படமும் வெளியானது. விமர்சன அளவில் அன்னபூரணி படத்திற்கும் பார்க்கிங் படத்திற்கும் பாசிடிவாகவே வந்துள்ளது. அனிமல் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அவ்வளவாக வரவேற்பினை கொடுக்கவில்லை. வெளியான முதல் நாளிலேயே அன்னபூரணி படம் ரூ.80 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. நேற்றும் இன்றும் வார இறுதி நாட்கள் என்பதால், இந்த வசூல் இன்னும் அதிகமாகியிருக்கும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | “கட் அடிக்கலாம் பிட் அடிக்கலாம்.. இதை மட்டும் பன்னாதீங்க” மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அறிவுரை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ