நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம்: அனிமல் திரைப்படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா எவ்வளவு கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.
நடிகை ராஷ்மிகா மந்தனா:
கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்ட நாயகனாக நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமடைந்தயார் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இதன் பின்னர் தமிழ் ரசிகர்களுக்கு ‘சுல்தான்’ படம் மூலம் அறிமுகமானவர், நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆனால் இதற்கு முன்னரே அவர் இந்தியா முழுவதும் பிரபலமாகியிருந்தார். சுல்தான் படத்தையடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவல்லி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் மிகப் பிரபலம் அடைந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். கடைசியாக சமீபத்தில் விஜய்யுடன் சேர்ந்து ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அழகான நடிகையாக மட்டுமன்றி ரசிகர்களை நன்கு மதிக்கும் நடிகையாகவும் வலம் வருகிறார், ராஷ்மிகா. இவருக்கு “நேஷனல் க்ரஷ்” என்ற இன்னொரு பெயரும் உண்டு.
அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா:
இதனிடையே தற்போது பாலிவுட்டில் நடிகை ராஷ்மிகா மந்தனா ‘அனிமல்’ (Animal) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படம் படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படம் உலகம் முழுவதும் 116 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது.
ராஷ்மிகா மந்தனா சம்பள விவரம்:
இந்நிலையில் தற்போது 'அனிமல்' திரைப்படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா எவ்வளவு கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில் நடிக்க சம்பளமாக 6 கோடி முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறாராம். வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க 3 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த ராஷ்மிகா தற்போது இந்த படத்தில் நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.
மற்ற நடிக்கர்களுக்கு எவ்வளவு சம்பளம்?
ரன்பீர் கபூர் சம்பளம்: 'அனிமல்' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ரன்பீர் கபூர், அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இடம் பெற்றுள்ளார். இந்த படத்தில் நடிக்க சம்பளமாக இவர் சுமார் 70 கோடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பாபி தியோல்: பாபி தியோல் ‘அனிமல்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த புதிய மற்றும் சவாலான கேரக்டரில் நடிக்க இவர் சம்பளமாக 4 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அனில் கபூர்: அனில் கபூர் தனது மகனுடனான உறவில் சிக்கிய பணக்கார தொழிலதிபரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன்படி அனிமல் படத்தில் நடிக்க சம்பளமாக 2 கோடிக்கு மேல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ‘சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க..’ மனதை சொக்க வைக்கும் மாளவிகா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ