நடிகை நயன்தாரா வெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கினறனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக காதலித்து வரும் இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "நானும் ரவுடிதான்". இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள் என்றும், இவர்களது ஐந்து வருட காதல், இந்தவருடம் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். சமீபத்தில் கூட இந்த காதல் ஜோடி கோவாவுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | அம்பலமான உதயநிதி - நயன்தாரா இடையில் இருந்த ரகசிய உறவு..!



சமீபத்தில், தீபாவளி அன்று RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது. 



இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா வெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், அந்த புகைப்படம் வேலைக்காரன் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்டது போல் தான் தெரிகிறது. இதை அவரின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR