ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வசூலுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களில் இது இரண்டாவது இடத்தைப் ஜெய்லர் பிடித்துள்ளது மற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்துக்கு வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், ரஜினிகாந்துக்கு முன், ஜெயிலரின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இந்த படத்தில் நடிக்க வேறு ஒரு நடிகரை தேர்வு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  இந்த படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க சிரஞ்சீவியை இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலரில் மாஸ் பாடல் காட்சிகள் மற்றும் டான்ஸ் மூமென்ட்ஸ் இல்லை என்ற காரணத்தால் சிரஞ்சீவி ஜெயிலர் படத்தை கமிட் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தனுஷின் கேப்டன் மில்லர்.. வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய லைகா, டிசம்பர் 15 ரிலீஸ்


மெகாஸ்டார் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவர்.  மாஸ் கதாநாயகனாக வளம் வரும் சிரஞ்சீவி இந்த காரணத்திற்காக தான் ஜெயிலரில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவர் ஜெயிலர் படத்தை முற்றிலும் வேண்டாம் என்று கூறவில்லை, மாறாக இயக்குனர் நெல்சனிடம், பின்னர் பார்ப்போம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அதிகார்வபூர்வாமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.  தற்போதைய நிலவரப்படி, ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது மற்றும் உலகம் முழுவதும் ரூ 650 கோடி வசூலித்துள்ளது. ஷாருக் கான் நடித்த தில்வாலே படத்தின் மலேசியா பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறையடித்துள்ளது ஜெய்லர்.  திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் இது குறித்து ட்வீட் செய்துள்ளது, ”மற்றும் ஒரு சாதனை தொடர்கிறது. ஜெய்லர் படம் மலேசியாவில் அனைத்து இந்தியப் படங்களிலும் அதிக வசூலில் முதல் இடம் பிடித்துள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். வரலாற்றில் இதுவரை இல்லாத தருணம்" என்று X தளத்தில் பதிவிட்டுள்ளது.  



ஜெயிலர் படத்தில் ரஜினி தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரனுடன் மகிழ்ச்சியாக அமைதியாக ஓய்வுபெற்ற ஒரு ஜெயிலரான முத்துவேல் பாண்டியனை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.  அவரது மகன் அர்ஜுன் பாண்டியன் (வசந்த் ரவி) காவல் உதவி ஆணையராக உள்ளார், கோயில் சிலைகள் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் போது அவர் காணாமல் போகிறார். பின்னர் அர்ஜுன் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. முத்துவேல் பாண்டியன் கோவில் சிலை காணாமல் போனதற்கு மூளையாக இருந்த வர்மனுடன் (விநாயகன்) எப்படி சண்டையிட்டு எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் ஜெய்லர் படத்தின் கதை.  இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ஜாபர் சாதிக் மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலரில் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். ஜெய்லர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ஜெய்லர் 2 படத்தை இயக்க நெல்சன் திட்டமிட்டுள்ளார். ரஜினி அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  ஏற்கனவே ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.  இதனை தொடர்ந்து தனது 171வது படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.


மேலும் படிக்க | விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குகிறது.. வெளியானது ருசிகர தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ