நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சிந்துபாத் திரைப்படத்தின் நெஞ்ச உனக்காக பாடல் வெளியிடப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சிந்துபாத். முன்னதாக இவரது இயக்கத்தில் 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி ஏற்கனவே நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது 3-வது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.


சிந்துபாத் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இவர்களை தவிர லிங்கா, விவேக் பிரசன்னா உள்பட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் இப்படத்தில் எண்ட்ரி கொடுத்துள்ளார். ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.



விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


முன்னதாக இப்படத்தில் இடம்பெற்று ராக்ஸ்டார் ராபர் என்னும் பாடல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாடலான "நெஞ்ச உனக்காக நான் பதிக்கி வைச்சேன்" பாடல் வெளியாகியுள்ளது. ஹரிச்சரண் பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.


பல்வேறு காரணங்களால் சிந்துபாத் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிபோன நிலையில், தற்போது ஜூன் 21-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.