எஸ்.ஜே.சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை: விரைவில் ரிலீஸ்!

எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை விரைவில் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை விரைவில் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இத படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
2017-ம் ஆண்டு வெளியாக வேண்டிய இந்தப் படம் பல தடங்கல்களால் இன்று வரை வெளிவராமல் உள்ளது. இந்நிலையில் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.