Tamil TV Serial Nenjathai Killathe: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கௌதம் மோதிரத்தை எடுத்துக் கொடுக்க மீடியா மதுவுக்கு கௌதம் ப்ரபோஸ் செய்வதாக நினைத்து போட்டோ எடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது வீட்டுக்கு வந்த மதுமிதாவிடம் அவளது அம்மா ரேணுகா என்னாச்சு என்று கேட்க மதுமிதா அமைதியாகவே இருக்க அவர் மதுவை திட்டி விடுகிறாள். இதைத்தொடர்ந்து ஜீவா மதுமிதாவை சமாதானம் செய்கிறான்.


மறுபக்கம் சந்தோஷ் கௌதமிடம் பேசிக் கொண்டிருக்கும்போது செய்தியில் கௌதம் மதுமிதாவிற்கு ப்ரபோஸ் செய்ததாக தப்பான தகவல் பரவ அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.


மதுமிதா அப்பார்ட்மெண்டில் இதுகுறித்து பேட்டி எடுத்துக் கொண்டிருக்க அதைப் பார்த்து ரேணுகா இதுதான் நடந்துச்சா ஏன் என்கிட்ட சொல்லல என்று சந்தோஷப்படுகிறாள். அதேபோல் கௌதம் ஆபீஸ்க்கு வந்ததும் அங்கு வேலை செய்பவர்கள் எல்லோரும் அவனுக்கு வாழ்த்து சொல்கின்றனர்.


இதனால் கௌதம் மதுமிதாவுக்கு போன் செய்து நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்க மது அதிர்ச்சி அடைகிறாள். பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க கௌதம் மீண்டும் என்ன சொல்றீங்க என்று கேட்க ஓகே என சம்மதம் சொல்கிறாள்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க - ஜோடியாக சிக்கிக்கொண்ட எழில் - சுடர், எகிறிய பிபி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ