அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா  நடைபெற்றது. அதில் விஷால் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது இயக்குனர் சுசீந்திரன் பேசியதாவது:-


நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது. 


இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ஜீவா திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ஜீவா திரைப்படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் Bi-lingual படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும் தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தேன். 


ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படபிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது. சில காலத்துக்கு பிறகு சந்தீப்புடன் இணைந்துள்ளேன். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்றார் இயக்குநர்.


தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C சென்டர் ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன் என இயக்குநர் சுசீந்திரன் பேசினார்.