சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாட்கள் தொடர்ந்து வந்ததால், வார இறுதியில் சென்னை நகர பாக்ஸ் ஆபிஸில் தல அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை" படம் 2019 ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 18 வரை நான்கு நாட்களில் மிஷன் மங்கல், கோமலி, பட்லா ஹவுஸ் மற்றும் ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் போன்ற படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரமேஷ் பாலா இன்று ட்வீட் செய்துள்ளார், "சென்னை நகர பாக்ஸ் ஆபிஸில் #NerKondaPaarvai படம் #IndependenceDay உட்பட 4 நாள் வார இறுதியில் அதிக வசூல் செய்துள்ளது." எனக் குறிப்பிட்டு உள்ளார். அதாவது நேர்கொண்ட பார்வை படம் 1.95 கோடியும், கோமாளி படம் 1.86 கோடியும் வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.


தல அஜித் நடித்துள்ள இந்த படம் ஏற்கனவே உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது. ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பிற பிராந்தியங்களில் ஒரு பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்து உள்ளது. 


பல புதிய படங்கள் வெளியாகி வரும் நிலையிலும், தல அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல்மழை பொழிந்து வருகிறது. இது ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஒரு பிளாக்பஸ்டராக இருந்து வருகிறது.


2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் படம் தான் நேர்கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் அஜித் குமார் நடித்துள்ளார். இந்த படம் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) திரைக்கு வந்தது. தமிழில் இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கியுள்ளார். அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.