விக்ரம் பிரபுவின் செப்டம்பர் 8 முதல் ‘நெருப்புடா’
விக்ரம் பிரபு நடிப்பில், புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெருப்புடா’. இதில் நிக்கி கல்ராணி, வருண், ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ‘நெருப்புடா’ படத்திற்கு தணிக்கை குழுவால் 'யு' சான்றிதழ் கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்த படக்குழு, வரும் செப்டம்பர் 8-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.