கொரோனா காலத்திற்குப் பிறகு OTT நிறுவனங்கள் தொடர்ந்து நிறைய படங்களை வாங்கி வெளியிட்டு வருகின்றனர்.  திரையரங்கில் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகு OTT தளங்களிலும், சில படங்கள் நேரடியாக OTT தளங்களிலும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.  பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொடங்கி தமிழில் சூர்யா படம் முறை நேரடியாக OTTயில் வெளியாகி வருகின்றன.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ 'ஜெயில்' படத்தின் ஓடிடி உரிமை - உயர்நீதிமன்றம் உத்தரவு


இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு வந்த நிலையிலும் தொடர்ந்து புதிய படங்கள் OTTயில் வந்த வண்ணமே உள்ளன.  தற்போது பல திரைப்படங்கள் OTT-காகவே எடுக்கப்பட்டு வருகின்றன.  திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பிறகு OTTயில் வெளியிட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு இருந்தாலும் சில படங்கள் 3 வாரம் அல்லது 2 வாரங்களிலேயே வெளிவந்து விடுகின்றன.  விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த போதிலும் உடனடியாக OTTயிலும் வெளிவந்தது.



சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் எந்தவித முன்னறிவிப்புமின்றி NETFLIX-ல் வெளியானது.  தமிழில் பெரிய ஹீரோ படங்களை அமேசான் நிறுவனமே இதுவரை வரை வாங்கி வந்தது.  தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெரிய ஹீரோக்களின் படங்களை வரிசையாக வாங்கி வருகின்றன.  சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம், ரஜினியின் அண்ணாத்த, அக்சய் குமாரின் சூரியவம்சி, துல்கர் சல்மானின் KURUP போன்ற மிகப் பெரிய படங்களை அதிக விலை கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.  மேலும் பல வெப்சீரிஸ்களையும் படங்களையும் இந்த மாதம் வெளியிட உள்ளது NETFLIX.  சமீபத்தில் உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்த Money Heist வெப்சீரிஸின் கடைசி பாகம் NETFLIXயில் வெளியாகியுள்ளது.


ALSO READ ஒரே மாதத்தில் இவ்ளோ படங்களா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த NETFLIX!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR