பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் ஓடிடியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் பாக்ஸராக நடித்த ஆர்யா தனது கடின உழைப்பால் உடலை மெருகேற்றி நிஜ பாக்சர் போலவே படத்திலும் காணப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் சார்பட்டா (Sarpatta Parambarai) படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி மீம்களாக குவிந்தது. ரங்கன் வாத்தியாரை கபிலன் சைக்கிளில் அழைத்துச்செல்லும் அந்த காட்சியை கடலில் செல்வது, வையறின் மேல் செல்வது, படகில் செல்வது, டைனோசர்கள் மீது செல்வது என்று தங்கள் கற்பனைக்கு ஏற்ப மாற்றி மீம்களாக பதிவேற்றி வந்தனர். 


ALSO READ | சார்பட்டா குழுவினரை சந்தித்து வாழ்த்திய கமல் - நன்றி கூறிய படத்தின் நாயகன் ஆர்யா


இந்த மீம்கள் மக்களிடத்தில் மட்டுமில்லாமல் திரைத்துறையினர், சார்பட்டா படக்குழு மற்றும் முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வரை சென்றடைந்துள்ளன.


இந்நிலையில் அடுத்த மாதம் நெட்பிளிஸ் Money Heist என்ற வெப் தொடரின் ஐந்தாம் பாகத்தை வெளியிட உள்ளது. அதனை விளம்பரப்படுத்தும் வகையில் சார்பட்டா படத்தின் வசனத்தை வைத்து ' ஹைஸ்டுனா என்னன்னு எனக்கு சொல்லிக் கொடுத்தது நீதான் வாத்தியாரே' என்று பதிவிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவிற்கு நடிகர் ஆர்யாவும் நன்றி தெரிவிப்பது போன்ற எமோஞ்சியை பதிவிட்டார்.


 



 


மேலும் சார்பட்டா படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தனது பாணியில் கமெண்ட் செய்துள்ளது. அதன்படி 'என்ன வேலை செய்ய விடுங்க வாத்தியாரே' என்று கிண்டலாக அவர் பதிவிட்டிருந்தார். இந்த கேலி கிண்டல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 



 


ALSO READ | சார்பட்டா பரம்பரை திரைப்படம்: இதுவரை சொல்லப்படாத கதை என நடிகர் சூர்யா பாராட்டு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR