தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை நேற்று கரம் பிடித்தார். நானும் ரௌடி தான் படத்தில் தொடங்கிய அவர்களின் நட்பு பின்பு காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும், காதலை பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவ்வப்போது சில இக்கட்டான நிகழ்வுகளில் மட்டும் தங்களின் காதலை சூசகமாகவும், மழுப்பலாகவும் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நயன் - விக்னேஷ் சிவனுக்கு தாலி எடுத்துக்கொடுத்தாரா ரஜினிகாந்த்?


ஒரு வழியாக ஜூன் 9 ஆம் தேதியன்று திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்தனர். மகாபலிபுரத்தில் நடைபெற்ற அவர்களின் திருமண விழாவில் பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான அனைத்து திரைப்பிரபலங்களுக்கும் திருமண விழாவில் பங்கேற்றனர். பாலிவுட் மெகா சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு விக்னேஷ் சிவன், தங்களின் திருமண புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார். 



நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இந்தப் புகைப்படங்கள் கணப்பொழுதில் இணைய டிரெண்டிங்கில் இடம்பிடித்தன. இன்னும் சொல்லப்போனால் நேற்று முழுவதும் எண்டர்டெயின்மென்ட் உலகம் முழுவதும் இருவரின் திருமண அப்டேட்டுகளாகவே இருந்தன. இது ஒருபுறம் இருக்க, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வயதை இணையவாசிகள் இண்டர்நெட்டில் அதிகம் தேடியுள்ளனர். 


வயதில் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா மூத்தவர். நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு தற்போது 37 வயதாகிறது. விக்னேஷ் சிவன் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு 36 வயதாகிறது. இந்த வித்தியாசத்தைத் தான் தேடிப் பார்த்து தெரிந்து கொண்டுள்ளனர் இணையவாசிகள். திருமணம் நடைபெற்றாலும் ஏற்கனவே கமிட்டான படங்கள் இருப்பதால், அதில் கவனம் செலுத்த இருக்கிறாராம் நயன்தாரா. சிரஞ்சீவியுன் காட்ஃபாதர் மற்றும் ஷாரூக்கானுடன் ஜவான் ஆகிய படங்களில் இவர் நடிக்க வேண்டிய சில காட்சிகள் இருக்கிறதாம். இந்தப் படங்களுக்குப் பிறகு, சினிமா பயணம் குறித்து முடிவெடுக்க இருக்கிறார் நயன்தாரா.


மேலும் படிக்க | கொரோனா பாதித்த ஷாருக்கான் நயன்தாரா மேரேஜில் கலந்துகொண்டது எப்படி?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR