ஐயா படம் மூலம் அறிமுகமாகி பல ஏற்ற இறக்கங்களையும், பலரால் தனிப்பட்ட உளவியல் தாக்குதல்களையும் சந்தித்த நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை நேற்று திருமணம் செய்துகொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாபலிபுரத்தில் இருக்கும் ஷெராட்டன் கிராண்ட் ரெசார்ட்டில் நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்தது. ரஜினி, ஷாருக் கான், போனி கபூர், மணிரத்னம், சூர்யா, கார்த்தி என பாலிவுட் கோலிவுட் முதல் பாலிவுட் ஸ்டார்ஸ்வரை வருகை தந்து இருவரையும் வாழ்த்தினர்


நயன்தாரா சிகப்பு நிற உடையிலும், விக்னேஷ் சிவன் வெள்ளை வேட்டி, சட்டையிலும் திருமண கோலத்தில் இருந்தனர். இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலானது.மேலும் இவர்களது திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தாலி எடுத்து கொடுத்ததாக தகவல் வெளியானது.


 



இதற்கிடையே தங்களது திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நேற்று மதிய உணவை தயார் செய்திருந்தனர். நயன் - விக்னேஷின் இந்த செயல் பலரிடம் பாராட்டை பெற்றது.


இந்நிலையில் நேற்று திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் திருப்பதிக்கு சென்று அங்கு நடந்த கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டனர். தற்போது அதுதொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



முன்னதாக இவர்களது திருமணம் முதலில் திருப்பதியில்தான் நடப்பதாக இருந்தது. ஆனால் அங்கு 150 பேருக்கு மேல் கூடுவதற்கு கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்காததால் இருவரும் தங்களது திருமணத்தை மகாபலிபுரத்தில் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | நயன்தாரா - விக்னேஷ் சிவன் வயது வித்தியாசம் எவ்வளவு? அதிகம் தேடிய நெட்டிசன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR