பாகுபலி-2 புதிய போஸ்டர் வெளியீடு!!
![பாகுபலி-2 புதிய போஸ்டர் வெளியீடு!! பாகுபலி-2 புதிய போஸ்டர் வெளியீடு!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/01/26/112679-baahubali2.png?itok=Wq-JtFSH)
பாகுபலி-2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது
பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகி வருகிறது. பாகுபலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ம் தேதி நிறைவடைந்தது. படத்தின்
டிரெய்லர் குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முழுமையாக முடியாததால் படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டிரெய்லர் வெளியாகாத நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் படத்தை ரீலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.