லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் , மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வந்தது. இப்படத்தில் கார்த்தி (karthi), ஜெயம்ரவி(jayam ravi), விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்,நடிகைகள் நடித்து வருகின்றனர்.  இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது.  கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த “பொன்னியின்செல்வன்-1” முதல் பாகம் படபிடிப்பு இத்துடன் முடிவடைந்தது என்று படக்குழு அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


பல தலைமுறகள் கொண்டாடி வரும் நாவல் கல்கியின் “பொன்னியின்செல்வன்”  எற்கனவே இதை படித்து பலர் பரவசமாகினர். பலரும் இதை படமாக்க நினைத்து முடியாமல் போனது. ஆனால் அதை முடித்து காட்டிள்ளார் மணிரத்னம். மணிரத்னம் “பொன்னியின்செல்வன்” எடுக்கிறார் என்றதும் , படம் ரிலீஸ்க்கு முன் நாவலை முதலில் படித்து விடவேண்டும் என்று ஆவலில் உலகம் முழுக்க பலர் இதை இப்பொழுது படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


இப்படி ஒரு படம் இனிமே அமையாது, அதை எடுக்கவும் முடியாது, அதற்கு வாய்ப்பே இல்லை, இதை மணிரத்னம் தான் செய்ய முடிந்தது, படத்தை பார்க்க ஆவலோடு உள்ளோம் என்று இதில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருமே சொல்லி வருவது மேலும் வியப்பை தருகிறது.  படத்தின் எதிர்பார்ப்பும் உலகம் முழுக்க அதிகரித்துள்ளது.  இதைபடம் அடுத்த ஆண்டு 2022ல் வெளியாகிறது.


 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR