நடிகர் சூர்யா நடிப்பில் உறுவாகி வரும் NGK என்னும் நந்த கோபாலன் குமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது.


இந்தப் படத்தின் டீசர், காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முந்தைய நாளே அதாவது நேற்றே அதை யாரோ டிவிட்டரில் கசியவிட்டுவிட்டனர். இதையடுத்து டீசர் ரிலீஸ் நேரம் பிப்ரவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு பதில் காலை 10.30 மணிக்கு மாற்றப்பட்டது.


இந்நிலையில் தற்போது NGK என்னும் நந்த கோபாலன் குமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.



டீசரை பார்த்த ரசிகர்கள் இந்தத் திரைப்படம் பலமடங்கு வித்தியாசமாக இருக்கும் என்று தெரிவித்துவருகின்றனர்.