Ninaithen Vandhai Serial Update Today : இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் கவின் வயிறு வலிக்குது என்று டிராமா போட்டு சுடர் சமைத்துக் கொடுத்த பிரியாணியை தான் சாப்பிட்டதாக சொல்ல இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது கனகவல்லி நாங்களும் அதே பிரியாணி தான் சாப்பிட்டோம் ஆனால் எங்களுக்கு எதுவும் ஆகல அப்படி இருக்கும்போது கவினுக்கு மட்டும் எப்படி புட்பாய்சன் ஆகும் என்று சுடருக்கு சப்போர்ட் செய்து பேச நீங்க இவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க என்று கோபப்படுகிறான். 



அதைத்தொடர்ந்து கவின் அல்டிமேட்டாக நடித்ததாக மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்க மனோகரி அங்கு வர உடனே மீண்டும் வலிப்பது போல நடிக்கிறான். மனோகரி எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிட்டு இங்க எல்லாருக்கும் கிஃப்ட் வாங்கிட்டு வந்திருப்பதாக சொல்லி எடுத்து கொடுக்கிறாள்.


மேலும் படிக்க | ஐடி ரைடரால் வந்த டுவிஸ்ட்.. அதிர்ச்சியான மாரி - இன்றைய எபிசோட் அப்டேட்!


அபிக்கு மட்டும் ஸ்பெஷல் கிப்ட் என்று சொல்லி தனியாக அழைத்துச் சென்று மேக்கப் கிட்டை கொடுக்க இதை யூஸ் பண்ண முடியாது அப்பா திட்டுவாரு என்று அபி சொல்கிறாள். உங்கப்பா பாக்கும்போது யூஸ் பண்ணா தானே பிரச்சனை கார்ல போகும்போது யூஸ் பண்ணி என்று ஐடியா கொடுக்க அபியும் இதை நல்லா ஐடியா என அதை வாங்கி ஸ்கூல் பேக்கில் மறைத்து வைக்கிறாள். 



பிறகு இவர்கள் காரில் ஸ்கூலுக்கு செல்லும்படி அபி மேக்கப் போட சுடர் என்னது என்று கேட்க இது எல்லாம் நீ கேட்காத, இதெல்லாம் தலையிடாத எங்கம்மாவே இதுக்கெல்லாம் ஓகே சொல்லி இருக்காங்க என்று பொய் சொல்ல அஞ்சலி அம்மா அப்படி சொல்லி இருக்காங்களா பொய் சொல்லாத என கோர்த்து விடுகிறாள். இருந்தாலும் அபி என் விஷயத்தில் தலையிடாத என சுடரிடம் கோபத்தை காட்டுகிறாள். 



அதன் பிறகு வேலு சுடரை தேட அவனுக்கு சுடர் ஒரு ஹாஸ்டலில் இருந்த தகவல் தெரிய வருகிறது. அவன் சுடரை தேடி ஹாஸ்டலுக்கு வர சுடர் எழிலுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடல் வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? சுடரும் வேலுவும் சந்தித்துக் கொள்வார்களா? என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | பழியை ஏற்ற மாறன்.. பளாரென அறைந்த வீரா..! - வீரா சீரியல் இன்றைய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ