பழியை ஏற்ற மாறன்.. பளாரென அறைந்த வீரா..! - வீரா சீரியல் இன்றைய அப்டேட்

தமிழ் சின்னத் திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் வீரா.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 6, 2024, 02:14 PM IST
  • வீரா சீரியல் இன்றைய அப்டேட்
  • பழியை ஏற்ற மாறன்
  • பளாரென அறைந்த வீரா..!
பழியை ஏற்ற மாறன்.. பளாரென அறைந்த வீரா..! - வீரா சீரியல் இன்றைய அப்டேட் title=

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்டேஷனுக்கு வந்த ராமச்சந்திரனிடம் வீரா பணக்காரங்கன்னா என்ன வேணாலும் பண்ணுவீங்களா என்று கேள்வி கேட்க ராமச்சந்திரன் உனக்கு நியாயம் கிடைக்கும் என சொல்லிவிட்டு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன் ஆக்சிடென்ட் பண்ணது யாரு என்று கேட்க சொல்ல முடியாமல் தவிக்கும் ராகவன் கையை அறுத்துக் கொண்டு சூசைட் செய்து கொள்ள முடிவெடுக்கிறான். கடைசி நொடியில் அவனை தடுத்து நிறுத்தும் மாறன், எதுவாக இருந்தாலும் பாத்துக்கலாம், அப்பா கிட்ட பேசிக்கலாம் என்று சொல்லி கீழே கூட்டி வருகிறான். 

மேலும் படிக்க | லால் சலாம் to லவ்வர்-இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?

ராமச்சந்திரன் சொல்லுங்க யார் ஆக்சிடென்ட் பண்ணது என்று கேட்க ராகவ் நான் தான் என உண்மையை சொல்ல வரும் நேரத்தில் மாறன் முந்திக் கொண்டு நான்தான் கொஞ்சம் அதிகமாக குடிச்சிருந்தேன் அதனால் தான் இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல அவனை தரதரவென ஸ்டேஷன்க்கு அடித்து இழுத்து வருகிறார் ராமச்சந்திரன். போலீசிடம் ஆக்சிடென்ட் பண்ணது இவன் தான் என்று மாறனை ஒப்படைக்க வீரா அவனை ஓங்கி அரைக்கிறாள். இதையடுத்து ராமச்சந்திரன் அங்கிருந்து வெளியே வர இதை பார்த்த மக்கள் பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான் என்று ராமச்சந்திரனை பாராட்டி பேச வீரா அவரை மதிப்புடன் பார்க்கிறாள். 

இதைத் தொடர்ந்து இங்கே வீட்டில் கேசவ் மாறன் ஜெயிலுக்கு போக நான் தான் காரணம் அப்பாவிடம் உண்மையை சொல்லிடறேன் என்று குற்ற உணர்ச்சியில் தவிக்க, வள்ளி நீ உண்மைய சொன்னா உன்னையும் கூட்டிட்டு போயிட்டு ஜெயில்ல தள்ளுமாறு அதுக்கப்புறம் உங்க அப்பா அதை நினைச்சு நினைச்சு செத்துப்போயிடுவாரு என்று சொல்ல கேசவ் அமைதியாகிறான். 

மேலும் வள்ளி அவனை அப்படியே விட்டுவிட மாட்டேன். மாறனை ஜெயில்ல இருந்து நான் வெளியே எடுக்கிறேன் என்று சொல்கிறாள். இதன் தொடர்ச்சியாக பாண்டியனின் உடல் வீட்டுக்கு வர தங்கைகள் சுற்றி நின்று கதற ராமச்சந்திரன் மாலையோடு அஞ்சலி செலுத்த வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ‘காமெடி கிங்’ கவுண்டமணி சொத்து மதிப்பு வெறும் இத்தனை கோடி தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News