’இந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை’ ரசிகர்களிடம் கெஞ்சும் நித்யா மேனன்
தனுஷ் நடிப்பில் வெற்றி பெற்றிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நித்யா மேனன் ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் தனுஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் கூட்டணியில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸானது. வெளியான நாள் முதல் சிறப்பான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் தொடர்ச்சியாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், தோழி ஒருவரின் துணையுடன் ஆண் வெற்றி பெறும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது திருச்சிற்றம்பலம். பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகை நித்யா மேனன், ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் கியூட்டான நடிப்பு அனைவரது மனங்களையும் வென்றுள்ளது. படத்தின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் நித்யா மேனன், ஷோபனா கதாப்பாத்திரத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். இதனால், அண்மையில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடன் இணைந்த நித்யா மேனன், படம் தொடர்பான பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது, அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கவுள்ளதாகவும், தனுஷுடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். தனுஷும் தான் எப்போது கூப்பிட்டாலும் வந்து நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், ரசிகர்கள் அவரை தாய் கிழவி என்று கூப்பிட, அப்படி கூப்பிடாதீர்கள் என்றும் அந்தப் பெயர் தனக்கு பிடிக்காது என்றும் நித்யா மேனன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இப்போக்கூட கேவலமா இருக்கேன் - கலந்துரையாடலில் விக்ரம் பேச்சு
மேலும் படிக்க | கபாலி படத்தால் மன உளைச்சல்தான் - உண்மையை உடைத்த பா. இரஞ்சித்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ