வெளியானது நயன்தாராவின் `லவ் ஆக்ஷன் டிராமா` ஃபர்ஸ்ட் லுக்..!
நிவின் பாலி மற்றும் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் லவ் ஆக்ஷன் டிராமா-வின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!
நிவின் பாலி மற்றும் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் லவ் ஆக்ஷன் டிராமா-வின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!
மலையாளத்தில் நிவின் பாலி நடித்து மாபெரும் வெற்றியடைந்த படம் பிரேமம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
தற்போது, இப்படத்தைப் போன்றே, நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு லவ் ஆக்ஷன் டிராமா. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தை தயன் சீனிவாசன் இயக்கியுள்ளார். அஜு வர்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லவ் ஆக்ஷன் டிராமா படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் வில்லனாக சீரியலில் ஹீரோவாக நடிக்கும் பிரஜின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகி உள்ளது. அதில், நயன்தாரா கல்லூரி படிக்கும் பெண்ணை போல சித்தரிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழ் நிலையில், சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் கொலையுதிர் காலம். இத்திரைப்படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. ‘ஹஷ்’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.